தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. நிகழ்ச்சி டைட்டில் வின்னர் ஆக அர்ச்சனா வெற்றி பெற்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக எதிர்மறை விமர்சனங்களுடன் வெளியேறினார் பூர்ணிமா.
இருப்பினும் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே இவரது நடிப்பில் சிவப்பி என்ற திரைப்படம் ஆகா OTT தளத்தில் வெளியானது. இதைக் கடந்து தற்போது மேலும் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் கிடைத்தது.
கோவை ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் இந்த படம் குறித்த மேலும் பல தகவல்கள் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
