தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி முடிந்தது. இதில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் அக்ஷரா ரெட்டி.
கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் சம்பவத்தில் இவருக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை பல மணி நேரம் விசாரணை செய்து வருகிறது. அக்ஷரா ரெட்டியின் உண்மையான பெயர் ஸ்வர்யா சுதாகர் என சொல்லப்படுகிறது.
தங்க கடத்தல் பிரச்சனை தலை தூக்கியதும் இவர் தன்னுடைய பெயரை அக்ஷரா ரெட்டி என மாற்றிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் இவர் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


