Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் Trending Player விருது பெற்ற ஜூலி புகைப்படம்.!

Bigg Boss Actress Juliana Award Winning Viral Photo

மெரினா கடற்கரையில் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் தான் ஜூலியானா. இதன் மூலம் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் மக்களின் இடையே வெறுப்புகளை மட்டும் பெற்றிருந்தார். ஆனாலும் மன தைரியத்தோடு போட்டோ ஷூட் செய்து கொண்டு அடுத்தகட்ட வேலையை செய்து கொண்டிருந்த ஜூலி. சில மாதங்களுக்கு முன்பு டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் வெளியான ‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் மீண்டும் போட்டியாளராக களமிறங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பே ஒழிஞ்சதும் – ஒளிந்ததும் போதும், இனி எல்லாரையும் ஓட விடுறேன், எல்லாருக்கும் குறும்படம் போட வைக்கிறேன் என்று பேசியிருந்தா வீடியோவை வெளியிட்டிருந்தார். சொன்னது போல் போன நிகழ்ச்சியில் வெறுப்பை மட்டும் சம்பாதித்த ஜூலி இந்த முறை மிகவும் பிடித்த போட்டியாளராக மாறியிருந்தார்.

இந்நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் ஆனால் கடைசியில் எலிமினேட் ஆகிவிட்டார். ஆனால் ஜூலி வின்னர் ஆகவேண்டும் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களின் ஆசைப்படி தற்போது the golden crown awards வழங்கிய ” THE TRENDING PLAYER OF BIG BOSS ULTIMATE TAMIL” என்ற விருதைப் பெற்றிருக்கிறார். இதனைப் ஜூலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியோடு நன்றி கூறி வெளியிட்டுள்ளார்.