தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 8 சீசன் முடிந்து தற்போது ஒன்பதாவது சீசன் தொடங்க உள்ளது. ஏழு சீசன்களில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்த நிலையில் எட்டாவது சீசனை மக்கள் செல்வம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார்.
எட்டாவது சீசன் டைட்டில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். தற்போது ஒன்பதாவது சீசனுக்கான ஆடிஷன் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் போட்டியாளராக பங்கேற்றிருக்கும் உமைர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இவர் ஏற்கனவே அமரன் படத்தில் நடித்த பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
