தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
அடுத்த வாரம் கிராம் பைனல் ஒளிபரப்பாக உள்ள நிலையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் விஷ்ணுவை தவிர்த்து மீதமுள்ள ஏழு போட்டியாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது வரை பதிவாகியுள்ள ஓட்டுக்களின் படி பூர்ணிமா கடைசி இடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் மாயாவும் மாயாவுக்கு அடுத்த இடத்தில் விஜய் வர்மாவும் இடம் பெற்றுள்ளனர். இதனால் மாயா மற்றும் பூர்ணிமா ஜோடியாக வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை கடந்த வாரத்தை போல மாயா இந்த முறையும் காப்பாற்றப்படுவார் ஆனால் பூர்ணிமா மற்றும் விஜய் வர்மா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கலாம்.
