Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காசு ,பணம் ,துட்டு, மணி, மணி… பணப்பெட்டியை எடுக்கப் போகும் போட்டியாளர் யார்?

bigg boss 7 day 93 promo 1 update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இது 14 ஆவது வாரம் என்பதால் அடுத்த வாரம் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விஷ்ணுவை தவிர்த்து மற்ற ஏழு போட்டியாளர்களும் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பணப்பெட்டி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளது. ஆரம்பத்தொகை ஒரு லட்சமாக இருந்த நிலையில் 5 லட்சம் ஆக அது உயர்த்தப்பட்டுள்ளது.

விசித்ரா யாராவது அந்த பணப்பெட்டி எடுத்துக்கிட்டு வெளியே போங்க என்று சொல்ல தினேஷ் யாரும் இந்த சீசனில் அதை எடுக்க மாட்டாங்க என்று கூறுகிறார். ‌ பணப்பெட்டியுடன் வெளியேறப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எடுத்துள்ளது.