Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் சீசன் 6 குறித்து வெளியான சூப்பர் தகவல்..வைரலாகும் பதிவு

Bigg Boss 6 Tamil Latest Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

போட்டியாளர்களாக யார் பங்கேற்க போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வரும் நிலையில் தற்போது இது குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக திரையரபலங்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களும் பங்கேற்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதற்காக https://vijay.startv.com/BigBoss/Index என்ற இணையதள பக்கத்தில் சென்று மக்கள் லாகின் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புகிறீர்கள் என செல்பி வீடியோ ஒன்று பேசி இதில் பதிவு செய்ய வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

அப்புறம் எதற்கு வெயிட்டிங் நீங்களும் லாகின் செய்து போட்டியாளர்களாக பங்கேற்கும் வாய்ப்பினை பெறுங்கள்.