Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

என்னோட கிரஷ் இவர் தான்?பிக் பாஸ் ஷெரினா ஓபன் டாக்

bigg-boss 6 sherina-about-crush-in-bb-house

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை நிகழ்ச்சியில் இருந்து இதுவரை மூன்று பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜி பி முத்து தானாக வெளியேறிக்கொண்டார்.

மொத்தம் 21 போட்டியாளர்களின் ஒருவரான செரீனா அழகு பொம்மையாக பிக் பாஸ் வீட்டில் வலம் வந்தார். இப்படியான நிலையில் பொம்மை டாஸ்க் தனலட்சுமி கீழே தள்ளி விட்டதாக தலையில் அடிபட்டதாக இவர் ஓவர் ஆக்டிங் செய்தது ரசிகர்கள் மத்தியில் வெறுப்படைய செய்தது. இதன் காரணமாக கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

வெளியேறிய செரீனா அளித்த பேட்டி ஒன்றில் கதிர் மீது உங்களுக்கு கிரஷ் இருக்கா என கேட்க அவர் எனக்கு நல்ல நண்பர். அதேபோல் அசீம்‌ எனக்கு அண்ணா மாதிரி. எனக்கு பிக் பாஸ் மீதுதான் கிரஷ்‌ என பேசியுள்ளார். மேலும் ஆயிஷா மற்றும் குயின்ஷி தனக்கு நல்ல தோழிகள். அவருடன் நான் நட்பை தொடர ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

bigg-boss 6 sherina-about-crush-in-bb-house
bigg-boss 6 sherina-about-crush-in-bb-house