தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியிலிருந்து ஜிபி முத்து தானாக வெளியேறி கொள்ள சாந்தி முதல் எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இந்த வாரம் இரண்டாவது நடைபெற உள்ள நிலையில் மகேஸ்வரி மற்றும் அசல் கோலார் உள்ளிட்டோர் குறைந்த வாக்குகளை பெற்றதாக சொல்லப்பட்டது.
இப்படியான நிலைமை பிக் பாஸ் வீட்டில் இருந்து அசல் கோளாறு வெளியேற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விசயமாகவே பார்க்கப்படுகிறது.


