Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த வாரம் நாமினேஷனில் இருக்கும் ஐந்து போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? வைரலாகும் வீடியோ

bigg boss 6 4th week nomination list update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கி மூன்று வாரங்கள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி உள்ளது. முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரத்தில் ஜிபி முத்து தானாக வெளியேறிக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து சாந்தி முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் இரண்டாவதாக கானா பாடகர் அசல் கோளாறு வெளியேற்றப்பட்டார். இதனைத்தொடர்ந்து மூன்றாவது வார எலிமினேஷனுக்காக நாமினேட் ஆன போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் அஸீம், ஆயிஷா, ஷெரீனா, கதிரவன் மற்றும் விக்ரமன் உள்ளிட்டோர் இடம்பெற்று இருப்பதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார். மேலும் இவர்களை நாம் இணைத்து செய்ய மற்ற போட்டியாளர்கள் சொன்ன காரணங்கள் என்ன என்பது குறித்தும் இந்த வீடியோவில் பிக் பாஸ் கூறியுள்ளார்.

இந்த ஐவரில் வெளியேறப் போவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.