Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் வினுஷா நடிக்கும் புதிய சீரியலின் டைட்டில் என்ன தெரியுமா?வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. சீரியலில் முதல் சீசனில் பாதியில் நாயகியாக நடிக்க வந்தவர் வினுஷா தேவி. இதனை தொடர்ந்து சீசன் இரண்டிலும் நாயகியாக நடித்த இவர் அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்து விட்ட நிலையில் புதிய சீரியல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் டிவியில் பனி விழும் மலர் வனம் என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ள சீரியலில் தான் நடிக்க உள்ளார்.

இந்த சீரியல் ஹீரோவாக ரெக்க கட்டி பறக்குது மனசு, தேன்மொழி பிஏ, ஈரமான ரோஜாவே 2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்த சித்தார்த் குமரன் தான் நடிக்க உள்ளார். வெகுவிரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Big Boss vinusha new serial update
Big Boss vinusha new serial update