Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் டைட்டில் யாருக்கு?விசித்திரா ஓபன் டாக்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து விசித்திரா வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் முதல் முறையாக வெளியிட்டுள்ள வீடியோவில் டைட்டில் வின்னர் குறித்து பேசி உள்ளார்.

அதாவது அர்ச்சனா அல்லது மாயாவுக்கு தான் டைட்டில் வெல்ல அதிக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். அர்ச்சனா வெளியிலிருந்து எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வொர்க் அவுட் செய்து உள்ளே வந்துள்ளார். அதற்கேற்றபடி தான் நடந்து கொள்கிறார். அவர் பிரதீப்புக்கு ஆதரவாக பேசியதால்தான் சப்போர்ட் அதிகமானது என தெரிவித்துள்ளார்.

மாயா விதையில் நாம் நெகட்டிவாக தெரிந்தால் கூட மக்களை எண்டர்டெயின் செய்ய வேண்டும் என்று விளையாடுகிறார். மாயா ஜெயித்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளார். அர்ச்சனா மற்றும் மாயா இவர்கள்தான் டைட்டில் வின்னர் மற்றும் ரன்னராக இருப்பார்கள் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

Big Boss Tamil 7 title winner update
Big Boss Tamil 7 title winner update