Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் டெலிவிஷன் அவார்ட் முன்னோட்ட நிகழ்ச்சியில் கண் கலங்கிய வெண்பா.. வைரலாகும் வீடியோ

Bharathi Kannamma Venba Emotional Video

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக வெண்பா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரீனா.

இவர் கர்ப்பமாக இருந்த சமயத்தில் தொடர்ந்து இந்த சீரியலில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் முன்னோட்டமாக நடைபெற்றுவரும் தானே தலைவி என்ற நிகழ்ச்சியில் தனது அம்மாவுடன் பங்கேற்றுள்ளார்.

வில்லியாக நடிப்பதால் என்னை நிறைய பேர் திட்டுவார்கள் அதுகூட பரவாயில்லை என் வயிற்றில் இருந்த குழந்தையைக் கூட திட்டினாங்க என கண் கலங்கினார். மேலும் அவருடைய அம்மா அத வெளில வரும்போது கொஞ்சம் பாசிட்டிவ் வைப் ஓட பாருங்க அது போதும் என கேட்டு கொண்டுள்ளார். ‌

இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.