Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாரதி கண்ணம்மா சீரியல் இந்த படத்தின் காப்பியா?கிண்டலடிக்கும் ரசிகர்கள்.

bharathi-kannamma-serial-trolls update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் அழகான காதல் கதையாக ஒளிபரப்பாக தொடங்கி அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்கிய இந்த சீரியல் எப்போது முடியும் என ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பாரதி டி என் ஏ டெஸ்ட் எடுத்ததும் அவருக்கு உண்மை தெரிய வந்ததும் இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கண்ணம்மா பாரதியோடு சேர்ந்து வாழ முடியாது என குழந்தைகளை கூட்டிக்கொண்டு வேற ஊருக்கு வந்து விட்டதால் கதை இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது.

கண்ணம்மா குழந்தைகளோடு வேற ஊருக்கு வந்து விட்ட நிலையில் பாரதி அவர்களின் மனதை மாற்றி சென்னைக்கு அழைத்துச் செல்ல இதே ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் இது சரத்குமார் நடிப்பில் வெளியான மூவேந்தர் படத்தின் கதை என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

ஆமாம் இந்த படத்தில் தேவயானி சரத்குமாருடன் சண்டை போட்டுவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு சொந்த ஊருக்கு வந்துவிட அங்கு வரும் சரத்குமார் அவரது மனதை மாற்றி வீட்டுக்கு அழைத்துச் செல்வார். அதே பாணியில் தான் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பு ஆவதாக ரசிகர்கள் கிண்டல் அடிக்கின்றனர்.

bharathi-kannamma-serial-trolls update
bharathi-kannamma-serial-trolls update