விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை கண்மணி. 2019-ல் தொடங்கிய இந்த தொடரில் பாதியிலேயே அவர் விலகினாலும், அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’ தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து ‘மகாநதி’ தொடரிலும் நடித்தார்.
சமீபத்தில் சன் டிவியின் பிரபல தொகுப்பாளர் அஸ்வத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார் கண்மணி. சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக மகிழ்ச்சியான செய்தியை இருவரும் அறிவித்தனர். இந்நிலையில், நடிகை கண்மணியின் வளைகாப்பு விழா மிக கோலாகலமாக நடைபெற்றது.
இந்த சந்தோஷமான நிகழ்வில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு கண்மணிக்கும் அவரது கணவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். கண்கவர் அலங்காரங்கள் மற்றும் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த விழாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இந்த தம்பதிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன், விரைவில் தாயாகவிருக்கும் கண்மணிக்கு நல்ல ஆரோக்கியத்தையும் வாழ்த்தி வருகின்றனர். இந்த அழகான தம்பதிக்கு விரைவில் குழந்தை பிறக்க நாமும் வாழ்த்துவோம்!
View this post on Instagram