Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாரதி எடுத்த முடிவு. சௌந்தர்யா சொன்ன வார்த்தை. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதியிடம் டாக்டர் உங்க மூணு பேரோட dna பர்ஃபெக்ட்டா மேட்ச் ஆகுது என சொல்ல இதைக் கேட்டு பாரதி அதிர்ச்சி அடைகிறார். உங்க மனைவி மேல எந்த தப்பும் இல்ல உங்க மனதுக்குள்ள இருக்க சந்தேகங்களை தூக்கிப்போட்டுட்டு சந்தோஷமா சேர்ந்து வாழ்கிற வழியை பாருங்க என டாக்டர் சொல்லி அனுப்ப கண்ணம்மாவ எவ்வளவு தரக்குறைவா பேசி இருக்கேன் என பாரதி வெளியே வந்ததும் தரையில் அமர்ந்து அழுகிறார்.

ஹேமா லட்சுமி ரெண்டு பேரும் எனக்கு பிறந்த குழந்தைங்கன்னு தெரிஞ்சிருச்சு உடனே சென்னைக்கு போய் கண்ணம்மா சுத்தமான சத்தம் போட்டு சொல்லி அவளோட சேர்ந்து வாழணும் என முடிவெடுக்கிறார் பாரதி. இந்த பக்கம் மயக்கத்தில் இருந்து ஹேமா கண் விழிக்க எல்லோரும் அவளை பார்க்க போக ஹேமா நடந்த விஷயத்தை சொல்லி என்னுடைய அப்பா யாரு சொல்லுங்க என கேட்க சௌந்தர்யா பாரதி தான் உன்னுடைய அப்பா என்ன சொல்ல முயற்சிக்க கண்ணம்மா அவளுடைய அப்பாவ பத்தி நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் என தடுத்து நிறுத்துகிறார். உனக்கு அம்மா அப்பா எல்லாமே நான் தான் நான் மட்டும் தான். உன்கிட்ட அப்பாவ பத்தி யார் கேட்டாலும் என் அம்மா தான் என்னுடைய அப்பானு தைரியமா சொல்லு என கூறுகிறார்.

பிறகு சௌந்தர்யா வேணு மற்றும் அஞ்சலி என மூவரும் கண்ணம்மாவை தனியாக அழைத்துச் சென்று அவளிடம் ஹேமா கிட்ட உண்மையை சொல்லிடலாம் என சொல்ல, கண்ணம்மா சொன்னா என்ன நடக்கும் இவ நீங்கதான் என்னுடைய அப்பாவானு உங்க புள்ளைய போய் கட்டிப்பிடிப்பா அவரு நான் உன்னை வளர்த்த அப்பா தான் உன்னை பெத்த அப்பா கிடையாது உங்க அம்மா நடத்த கெட்டவன்னு சொன்ன கஷ்டம் யாருக்கு? அப்பா தன்னை ஏத்துக்கணும்னு லஷ்மி தவிக்கிற தவிப்பே போதும். எனக்கு உண்மை தெரிகிற போது அதை உங்க புள்ள ஏத்துக்கிற மனநிலையில் இருக்கணும் என ஷாக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
bharathi kannamma serial episode update