bharathi kannamma serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் கண்ணம்மா சேர்ந்து வாழலாம் என சொன்னதை பாரதி நினைத்துக் கொண்டிருக்க அப்போது அவருடைய மனசாட்சி தோன்றி கண்ணம்மா சொன்னது சரிதானே அப்படியே செய்யலாமே எனக் கூற டி என் ஏ டெஸ்ட் வர வரைக்கும் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன் என பாரதி உறுதியாக சொல்ல உன் வாழ்க்கை உன் கையில் என சொல்லி மனசாட்சி மறைகிறது.
இதனைத் தொடர்ந்து ஹேமா, லட்சுமி ஹோம் ஒர்க் செய்து கொண்டிருக்கும் போது திடீரென லட்சுமி எழுந்து சென்று கீழே போய் கண்ணம்மாவிடம் ஸ்கூலில் நடந்த விஷயங்களை சொல்ல அவர் அப்பா பத்தி கேட்டா நீ சமாளிச்சுக்க என கூறுகிறார். பிறகு கண்ணம்மா மேலே வந்ததும் ஹேமா தன்னுடைய அப்பா பற்றி கேட்க கோபப்படும் கண்ணம்மா லட்சுமியை கூப்பிட்டு உன் அம்மா யாரு? அப்பா யாரு எனக்கு கேட்க இரண்டும் நீ தான் என லட்சுமி சொல்ல உனக்கு அதே தான் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இனிமே இந்த கேள்வியை மட்டும் என்கிட்ட கேட்காத என சொல்லிவிட்டு ரூமுக்குள் சென்று அழுகிறார்.
இந்த பக்கம் ஹாஸ்பிடலில் இருந்து வரும் வெண்பாவுக்கு சாந்தி ஆரத்தி எடுக்க வர ஷர்மிளா ஆரத்தி தட்டை தட்டி விடுகிறார். ரோஹித் வெண்பா ரூமில் தான் இருப்பார் என சொல்ல கண்டவன் எல்லாம் என் ரூம்ல இருக்க கூடாது என வெண்பா ஆவேசமாக பேச ஷர்மிளா வக்கீலுக்கு போன் போட்டு கருக்கலைப்பு கேசை மீண்டும் எடுக்கச் சொல்ல வெண்பா பயந்து போய் ரோஹித் என் ரூம்லயே இருக்கட்டும் என ஒப்புக்கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஹேமா பாரதிக்கு போன் போட்டு எனக்கு ஒரு உதவி செய்வீங்களா என கேட்க பாரதி ஆவலோடு என்ன சொல்லு என கேட்க என்னுடைய அப்பா யாருன்னு உங்களுக்கு தெரியுமா? சொல்லுங்க என கேட்க எந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது அதே கேள்வியை என்கிட்ட கேக்குறியே என அழும் பாரதி எனக்கு தெரியாது என கூறிவிடுகிறார். இதனால் ஹேமா அழுது கொண்டே போனை வைத்து விடுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…