Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெண்பாவிடம் கோபமாக பேசிய பாரதி.. ஹேமா எடுத்த முடிவு.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma Serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த வெண்பாவை ஹாஸ்பிடலில் அனுமதிக்க அவளை பரிசோதனை செய்த டாக்டர் வெண்பாவுக்கு கரு கலைந்து விட்டதாக சொல்ல ரோஹித் ஷர்மிளா என இருவரும் கதறி அழுகின்றனர்.

இந்த பக்கம் பாரதி ஷோபாவில் வந்து அமர சௌந்தர்யா மற்றும் வேணு என இருவரும் அவனை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். ஹேமாவின் ஷூவுக்கு பாலிஷ் போட்டு கையில் எடுத்து வைத்திருக்க அப்போது ஹேமா வந்து ஸ்கூலுக்கு கிளம்புவதாக சொல்ல பாரதி ஷூ போட்டு விடுகிறேன் வா என்று சொல்ல ஷூவை கொடுங்க என கோபப்படுகிறாள். என்ன பண்ணது தப்புதான் டாடிய மன்னிச்சுடு டாடி என்று கூப்பிடு என சொல்ல இனிமே உங்கள டாடி என்று கூப்பிட மாட்டேன் என ஹேமா அதிர்ச்சி கொடுக்கிறாள்.

பிறகு அகில் சித்தப்பாவை ஸ்கூலில் விட சொல்லி ஸ்கூலுக்கு சென்று விடுகிறார். ஸ்கூலுக்குப் போனேன் ஹேமா லட்சுமி இடம் எனக்கு அந்த வீட்டில இருக்கவே புடிக்கல என வருத்தப்பட அப்படின்னா எங்க வீட்டுக்கு வந்தது அம்மாவோட நம்ம ரெண்டு பேரும் ஜாலியா இருக்கலாம் என சொல்ல நீ சாயங்காலம் சமையலமாவை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வா நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என சொல்கிறாள்.

இந்த பக்கம் வெண்பா மூச்சு திணறல் ஏற்படுவது போல நடித்து பாரதியை ரூமுக்கு வரவைத்து அவனிடம் பேசுகிறார். பாரதி உன்னுடைய நடிப்பு எல்லாம் போதும் இனியும் நான் எதையும் நம்ப தயாராக இல்லை என சொல்ல வெண்பா என மன்னிச்சிடு பாரதி உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியாது என அவாய்ட் பண்ணாத என அழுது டிராமா போட பாரதி இனிமேல் என் வாழ்க்கையில் உனக்கு இடம் இல்லை. அன்னைக்கே வெண்பாவோட சாப்டர் க்ளோஸ் என கூறுகிறார். பிறகு பாரதி வெளியே வந்து விட உன்னை நான் விடமாட்டேன் என வெண்பா சபதம் எடுக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma Serial episode update
bharathi kannamma Serial episode update