Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெண்பாவால் அதிர்ச்சியான பாரதி.. பாரதியை கிண்டல் அடிக்கும் அஞ்சலி.. இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்..

bharathi kannamma serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி சாயங்காலம் 5 மணிக்கு டி.என்.ஏ டெஸ்ட் வரும் என காத்துக் கொண்டிருக்க ஆனால் ரிசல்ட் இன்னைக்கு வராது நாளைக்கு மதியம் 1 முதல் 2 மணிக்குள் வந்துவிடும் என சொல்ல பாரதி அதிர்ச்சி அடைகிறார். நாளைக்கு 10:30 மணிக்குள் ரிசல்ட் வர வேண்டும் என பாரதி சொல்ல அதற்கு ரிசல்ட் கொடுத்து விடுவதாக சொல்கிறார்.

அதன் பிறகு பாரதி கண்ணம்மாவை கூப்பிட்டு நாளைக்கு நான் லீவு என சொல்ல கண்ணம்மா காரணம் கேட்க பர்சனல் ரீசன் என சொல்லு என கூறுகிறார். வெண்பாவுக்கு கல்யாணம் அப்பக்கூட மதியத்துக்கு மேல வந்துடுவீங்களோ என என்ன கேட்க சொன்னத மட்டும் செய் என பாரதி சத்தம் போட்டுவிட்டு கிளம்பி விடுகிறார்.

அடுத்து வெண்பா பாரதிக்கு போன் போட்டு நாளைக்கு நமக்கு கல்யாணம் நான் எவ்வளவு ஆவலா காத்துக்கிட்டு இருக்கேன் என சொல்லி பாரதியை உன் குடும்பத்தோட கல்யாணத்துக்கு வராத ஏதாவது காரணம் சொல்லி வீட்டிலேயே இருந்து அதுக்கப்புறம் நீ நேர பொன்னியம்மன் கோவிலுக்கு வந்துடு என கூறுகிறார். நீ வரலைன்னா நான் நிச்சயம் தூக்க மாத்திரை போட்டு செத்துடுவேன் என மிரட்டுகிறார்.

பின்னர் பாரதியின் மனசாட்சி தோன்றி இப்ப நீ என்ன பண்ண போற வெண்பா எப்படியும் அவ கழுத்துல தாலி கட்ட வச்சிடுவா நீ தாலி கட்ட போறியா இல்ல டி என் ஏ ரிசல்ட் வரைக்கும் காத்திருக்க போறியா? என கேட்க எந்நேரம் ஆனாலும் டி என் ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்த பிறகு தான் வெண்பா கழுத்தில் தாலி கட்டுவேன் என கூறுகிறார்.

மறுநாள் எல்லோரும் கல்யாணத்துக்கு கிளம்பி கொண்டிருக்க பாரதி எனக்கு முக்கியமான மெடிக்கல் கான்பிரன்ஸ் மீட்டிங் இருக்கு என சொல்கிறார். பெஸ்டிக்கு கல்யாணம் என்பதால் வருத்தமாய் இருக்கீங்களா என அஞ்சலி கிண்டல் அடிக்க அதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க முன்னாடி போங்க நான் மீட்டிங் முடிச்சுட்டு வந்தேன் என பாரதி சமாளிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
bharathi kannamma serial episode update