bharathi kannamma serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஹேமா மயங்கி கிடக்க பாரதி நீங்கதான் இதுக்கெல்லாம் காரணமா என வீட்டில் இருப்பவர்களிடம் சத்தம் போட எங்களுக்கும் இதெல்லாம் நடக்கும் என்று தெரியாது என கூறுகின்றனர் இந்த நேரத்தில் ஹேமா கண் விழிக்கிறார்.
கண் விழித்த உடனே ஹேமா நான் ஒரு அனாதையா டாடி என கேட்க அனைவரும் ஆடிப் போகின்றனர். அப்படியெல்லாம் சொல்லக்கூடாது உனக்காக நாங்கள் எல்லோரும் இருக்கும் என ஹேமாவை சமாதானம் செய்கின்றனர். பிறகு சௌந்தர்யா கண்ணம்மாவுக்கு போன் போட்டு வீட்டில் நடந்த விஷயத்தை சொல்ல அவர் கதறி அழுகிறார்.
இப்பவே வீட்டுக்கு வந்து ஹேமாவிடம் நான் தாண்டி உன் அம்மா என உண்மையை சொல்லி கூட்டிட்டு வந்து என்னோட வச்சுக்க போறேன் என கண்ணம்மா முடிவு எடுக்க சௌந்தர்யா தயவு செஞ்சு அப்படியெல்லாம் பண்ணிடாத என தடுத்து நிறுத்துகிறார். கடைசி வரைக்கும் அவர் உண்மையை தெரிந்துகொள்ள போறதும் கிடையாது நாங்க சேர்ந்து வாழ போறதும் கிடையாது. இப்படியே குழந்தைகளை பிரித்து வைத்து வாழ வேண்டியதுதான் அந்த பாவம் நம்மள சும்மா விடாது என சொல்லி போனை கட் பண்ணுகிறார்.
அடுத்து பாரதிக்கு வெண்பா போன் போட்டு முத்தம் வேணும் என லவ் டார்ச்சர் செய்ய பாரதி கோபப்பட்டு திட்டி விடுகிறார். பிறகு பாரதி வீட்டில் நடந்த விஷயங்களை சொல்ல வேண்டாம் அதையெல்லாம் கேட்டுவிட்டு முக்கியமான விஷயம் நாளைக்கு நாம கல்யாண ட்ரஸ் எடுக்க போறோம். பதினொன்றரை மணிக்கு நான் லொகேஷன் அனுப்புற இடத்துக்கு வந்துடு என சொல்ல பாரதி அதெல்லாம் எதுக்கு என கேட்க எனக்கு கல்யாண பட்டு புடவை கட்டிய ஆகணும் என வெண்பா சொல்லி போனை வைக்கிறார்.
பிறகு பாரதி ஹாஸ்பிடலுக்கு போன் போட்டு டி என் ஏ டெஸ்ட் ரிப்போர்ட் எப்பதான் வரும் என கேட்க அவர்கள் நாளைக்கு சாயங்காலம் தான் வரும் என சொல்ல ஐந்து மணிக்கு நானே வந்து வாங்கிக்கிறேன் என பாரதி கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…