Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாரதியைப் பற்றி ரோஹித்திடம் சொன்ன வெண்பா.. பாரதி எடுக்கும் முடிவு.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் ஹாஸ்பிடலுக்கு வந்த ஹேமா பாரதியிடம் யாருக்கு நீங்கள் டிவோர்ஸ் கொடுக்க போறீங்க? அம்மா இறந்து போய்ட்டாங்கனு சொன்னீங்க, அப்படி இருக்கும்போது யாருக்கு இந்த டிவோர்ஸ்? அம்மா எங்க இருக்காங்க? நீங்கள் ஏன் பிரிஞ்சீங்க என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். பதில் சொல்லாமல் பாரதி தவிக்க அப்போது நர்ஸ் எமர்ஜென்சி கேஸ் என கூறி பாரதியை அழைத்து செல்கிறார்.

இந்த பக்கம் ரோஹித் வெண்பாவை பீச்சுக்கு அழைத்து சென்று தண்ணீரில் ஆட்டம் போடுகிறார். மீன் பிடிக்க துப்பட்டா கொடு என கேட்க கடல்ல துப்பட்டால மீன் பிடிப்பியா என நக்கலாக சிரிக்கிறார் வெண்பா. ரோஹித் நான் பிடிச்சு காட்டறேன் என சொல்லி இருவரும் முயற்சி செய்ய முதலில் சிப்பிக்கள் வருகிறது. பின்னர் வெண்பா ராசியை வைத்து மீன் பிடிக்க செருப்பும் சரக்கு பாட்டிலும் சிக்குகிறது. கடைசியாக ஒரு முறை முயற்சி செய்யலாம் என முயற்சிக்க சொன்னபடி மீன் பிடித்து விடுகிறார் ரோஹித். வெண்பா ஆச்சரியமடைகிறார்.

அதன்பிறகு பாரதி கண்ணம்மாவை சந்தித்து ஹேமாவிடம் விவாகரத்து பத்தி எதுக்கு சொன்ன என சத்தம் போட நான் இல்லை என கண்ணம்மா லட்சுமி மற்றும் சௌந்தர்யா மீது சத்தியம் வைத்து கூறுகிறார். பிறகு வேற யார் சொல்லி இருப்பார் என பிரதி யோசிக்கிறார்.

அதன் பின்னர் இந்த பக்கம் வெண்பா ரோஹித்திடம் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேச வேண்டும் என சொல்லி பாரதியை 10 வருடமாக காதலித்து வருவதை கூறுகிறார். இதைக்கேட்டு ரோஹித் டல்லாக பின்னர் சிரிக்க வெண்பா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது .

bharathi kannamma serial episode update
bharathi kannamma serial episode update