Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கண்ணம்மாவை பற்றி பேசிய பாரதி..காத்திருக்கும் அதிர்ச்சி..இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் விருது வழங்கிய பிறகு பாரதியை மேடைக்கு அழைத்து பேச சொல்கின்றனர். மேடைக்குச் சென்று பேசத் தொடங்கும் பாரதி நான் என்னுடைய கடமையைத்தான் செய்தேன். என்னை நம்பி சிகிச்சை எடுக்க வந்த அமைச்சரை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய குறிக்கோளாக இருந்தது.

இருந்தாலும் ஆபரேஷன் செய்யும் போது பிணை கைதிகளாக இருப்பவர்கள் எல்லோரையும் சேர்த்து காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றம் என்னுள் இருந்தது. அப்போது எனக்கு உறுதுணையாக இருந்து தைரியம் தரும் வார்த்தைகளை சொல்லி ஆப்ரேஷனை நல்லபடியாக முடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் அட்மின் ஆபிஸர் கண்ணம்மா. அதுமட்டுமல்லாமல் என்னுடைய வாழ்க்கையே முடிஞ்சு போச்சு என நினைத்த தருணம் தீவிரவாதிகள் என் உடம்பில் வெடிக்குண்டு கட்டி டைமரை ஆன் செய்தது. அப்போதும் அங்கு வந்த அட்மின் ஆபிசர் என்னை காப்பாற்றியதை மறக்கவே மாட்டேன்.

எங்கம்மா கொடுத்த உயிர் மூலமா இந்த உலகத்துக்கு வந்து மீண்டும் இந்த உலகத்தில் வாழ காரணம் கண்ணம்மா கொடுத்த உயிர் தான் என சொல்லி நன்றி கூறுகிறார். பிறகு கண்ணம்மா பேசும்போது நானும் என்னுடைய கடமையைத்தான் செய்தேன். அட்மின் ஆஃபீஸராக எல்லோரையும் காப்பாற்ற வேண்டியது என்னுடைய பொறுப்பு என நினைத்தேன் என சொல்கிறார்.

அடுத்து போலீஸ் அதிகாரிகள் பாரதியிடம் பேசும் போது நீங்களும் கண்ணம்மாவும் கணவன் மனைவி என கேள்விப்பட்டோம். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறீர்கள். நீங்கள் ஏன் திரும்பவும் சேர்ந்து வாழக்கூடாது என சொல்ல வெண்பா சொன்னதை நினைத்து பார்க்கும் பாரதி அது மட்டும் என்னால் முடியாது என கூறிவிட்டு கிளம்பி விடுகிறார்.

பிறகு சௌந்தர்யா கண்ணம்மாவை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டு இது பற்றி பேசும்போது அவர் அவர் உயிரை காப்பாற்றியதற்காக என்னுடன் சேர்ந்து வாழ்கிறேன் என சொல்லி இருந்தால் அதற்கு நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். அவர் செய்த தவறை உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டால் நான் நிச்சயம் அவரோடு சேர்ந்து வாழ்வேன் என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 bharathi kannamma serial episode update

bharathi kannamma serial episode update