Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாரதியை காப்பாற்ற போராடும் கண்ணம்மா.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி மனித வெடிகுண்டாக மாற்றப்பட்டிருந்த நிலையில் இன்னொரு பக்கம் ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக அமைச்சரை தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கின்றனர்.

அஞ்சலி ஒரு வழியாக அகிலை மீட்டு வெளியே அழைத்து வர இன்னொரு பக்கம் கண்ணம்மா பாரதியை காப்பாற்ற முயற்சி செய்ய அவன் என் உடம்பில் வெடிகுண்டு இருக்கு வெளியே போ என சொல்ல கண்ணம்மா நீங்க இல்லாம என்னால போக முடியாது இரண்டு பேரும் வெளியே போகலாம் இல்லனா இங்கேயே செத்துப் போகலாம் என கூறுகிறார். பாரதி எவ்வளவு சொல்லியும் கண்ணம்மா அங்கிருந்து நகராமல் அவனை காப்பாற்ற முயற்சி செய்கிறார்.

இந்த பக்கம் தீவிரவாத தலைவன் ஹேமா மற்றும் லட்சுமி இருவரையும் துப்பாக்கி முனையில் வைத்து போலீசாரை மிரட்ட கடைசியில் தீவிரவாதி ஒருவனே தன்னுடைய அம்மா பேசிய வீடியோவை நினைத்து பார்த்து மனம் மாறி தலைவனை சுட்டுத் தள்ள பிறகு குழந்தைகளை மீட்கின்றனர். எல்லோரும் வெளியே சென்ற பிறகு கண்ணம்மா சௌந்தர்யாவுக்கு வீடியோ கால் செய்து பாரதி உடம்பில் பாம் இருக்கிறது உடனே பக்கத்தில் இருக்கும் போலீசிடம் போனை கொடுக்குமாறு கேட்கிறார். பிறகு போலீஸ் கண்ணம்மாவிடம் மஞ்சள் ஒயரை கட் செய்ய சொல்கின்றனர்.

கடைசியில் அந்த ஒயர் வேண்டாம் ரெட் கலர் வயரை கட் செய்யுமாறு சொல்ல கண்ணம்மாவும் அப்படியே கட் பண்ண பாம் வேலை செய்யாமல் போகிறது. பிறகு போலீஸ் அந்த இடத்திற்கு வந்து வெடிகுண்டை நீக்கி பாரதியை வெளியே கூட்டிச் செல்கின்றனர். ஒரு வழியாக தீவிரவாதிகளின் பிடியிலிருந்து எல்லோரும் பத்திரமாக வெளியே அழைத்துச் செல்லப்படுகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 bharathi kannamma serial episode update

bharathi kannamma serial episode update