Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாரதியை கட்டி அடித்து துன்புறுத்தும் தீவிரவாதிகள்.. கதறும் சௌந்தர்யா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு தண்ணீரில் மயக்க மருந்து கலந்த பாரதியில் தீவிரவாதிகள் ஒரு தனி அறையில் கட்டி அடித்து துன்புறுத்துகின்றனர்.

இந்த பக்கம் சௌந்தர்யா போலீஸ் அதிகாரிகளிடம் பாரதிக்கு என்னாச்சு துப்பாக்கி சத்தம் கேட்டது ஏன் என அவர்களிடம் கேட்டு எச்சரிக்க அவர்கள் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை கொஞ்சம் எங்களை வேலை செய்ய விடுங்கள் என கூறுகின்றனர். இதனை எடுத்து செய்திகளில் பாரதி தனி அறையில் கட்டி அடித்து துன்புறுத்தப்படும் வீடியோவை தீவிரவாதிகள் வெளியிட அதைப் பார்த்து சௌந்தர்யா கதறி துடிக்கிறார்.

இந்த பக்கம் பெண்களின் கற்பை சூறையாடும் தீவிரவாதி பல பெண்களை அனுபவித்த பிறகு யாரை தேர்வு செய்யலாம் என பார்த்து அஞ்சலியை கூப்பிட பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணம்மாவிடம் இந்த விஷயத்தை சொல்ல பிறகு கண்ணம்மா அஞ்சலி வேண்டாம் நான் வருகிறேன் என வாண்டடாக எழுந்து தீவிரவாதியோடு செல்கிறார். கண்ணம்மாவை தனியாக அழைத்துச் செல்லும் அவன் பாத்ரூமுக்குள் போக சொல்ல இந்த இடம் வேண்டாம் வேற இடம் இருக்கு என அவனை ஸ்டோர் ரூமுக்கு அழைத்துச் செல்கிறார்.

பிறகு அந்த தீவிரவாதி கண்ணம்மாவின் அழகை வர்ணித்து அவளிடம் தப்பாக நடக்க முயற்சி செய்ய கண்ணம்மா பக்கத்திலிருந்து கத்தரிக்கோலை எடுத்து அவன் கழுத்தில் குத்தி மார்பில் குத்தி அவனை கீழே தள்ளி விடுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 bharathi kannamma serial episode update

bharathi kannamma serial episode update