bharathi kannamma serial episode update
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாரதி ஹேமாவை கூட்டிக்கொண்டு ஸ்கூலுக்கு வர ஹேமாவை பார்த்த நண்பர்கள் அவளிடம் டிசி வாங்குவது பற்றி விசாரிக்க அதற்குள் பாரதி சரி நீ பேசிக்கிட்டிரு நான் போய் பிரின்ஸ்பல் பார்த்துட்டு வரேன் என கிளம்புகிறார். ஹேமா வந்திருக்க விஷயம் தெரிந்ததும் லட்சுமி ஓடி வந்து ஹேமாவை கட்டிப்பிடித்து அழுகிறார். நீ இல்லாம எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஸ்கூல்ல படிக்கவே பிடிக்கல. நீ வேற ஸ்கூல் போய்ட்டா நான் எப்படி இருப்பேன் யார் கூட விளையாடுவேன் யார் கூட சாப்பிடுவேன் என அழுகிறார். எனக்கும் தான் லட்சுமி வேற ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல ஆனால் டாடி யார் சொல்லியும் கேட்கல என்ன பண்றது என கதறுகிறார்.
டாக்டர் அப்பாகிட்ட நான் பேசுவேன் என சொல்லி லட்சுமி ஓடுகிறார். கண்ணம்மா ஸ்கூலுக்கு வந்திருக்கும் நிலையில் ஹாஸ்பிடலில் தீவிரவாத கூந்தல் மாறுவேடத்தில் மெயின்டனன்ஸ் வேலைகளுக்காக வந்திருப்பதாக சொல்லி உள்ளே புகுந்து பல இடங்களில் துப்பாக்கிகளை ஒளித்து வைக்கின்றனர்.
ஸ்கூலில் பாரதியை பார்த்த லட்சுமி டாக்டர் அப்பா ஹேமாவள ஸ்கூல்ல சேர்க்காதீங்க லாவண்யா எங்க வீட்டு பக்கத்திலேயே இருக்க ஒரு சின்ன ஸ்கூல்ல சேர்ந்து படிச்சுக்கிறேன். ஹேமாவ ஸ்கூல் மாத்தாதீங்க சத்தியமா நான் ஹேமா கிட்ட நீங்க தான் என் அப்பானு சொல்ல மாட்டேன் என கெஞ்சுகிறார். அம்மா கூட இதுவரைக்கும் என்கிட்ட எந்த உண்மையையும் சொன்னது கிடையாது நானா தான் எல்லாத்தையும் கண்டுபிடித்தேன் நான் உங்ககிட்ட கேக்கணும்னு நினைச்சிருந்தா அன்னைக்கே கேட்டிருப்பேன் ஹேமா கிட்ட அப்பவே சொல்லி இருப்பேன் நான் அப்படி பண்ணல நீங்களே யோசிச்சு பாருங்க என அழுகிறார்.
ஆனால் எதுவும் கேட்காமல் பாரதி டீசி வாங்க சென்று விடுகிறார். அதன் பிறகு கண்ணம்மா வந்து லட்சுமி ஆறுதல் படுத்த பிறகு டிசி வாங்கி வந்த பாரதி ஹேமாவை வீட்டிற்கு அழைக்க அந்த நேரத்தில் லட்சுமி ஓடி வந்து ஹேமாவை பிடித்து அழுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பிரண்டையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
என் உயிர் ரசிகர்களே, என் அன்பு நண்பர்களே எனது பேரன்புகொண்ட பொதுமக்களே வணக்கம், இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து…
நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், பரதேசி,…
தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர்…