Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சௌந்தர்யாவால் கடும் அதிர்ச்சி ஆன வெண்பா.. வெண்பாவை வெறுப்பேற்றிய கண்ணம்மா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஐயர் நிச்சயதார்த்த பத்திரிக்கையை வாசிக்கும் போது வெண்பா நிறுத்துங்க யாருமில்லாத அனாதையாய் இருக்கும் இந்த ரோகித்த என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது என கூறுகிறார். எனக்கு மாமனார் மாமியார் புருஷன் கூட பொறந்தவங்க குழந்தைங்க என கூட்டு குடும்பமான பெரிய குடும்பத்துல வாழனும்னு தான் ஆசை என சொல்கிறார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் வெண்பா சொல்றதுல என்ன தப்பு அவளுக்கு ஏத்த மாப்பிள்ளை பாருங்க. அப்படி இல்லன்னா ரோகித்தோட பேரண்ட்ஸ் கிட்ட பேசி சமாதானம் பண்ணுங்க எனக் கூறுகின்றனர். வெண்பா சந்தோஷமாக இருக்க சௌந்தர்யா எதிர்பாராத அதிர்ச்சி கொடுக்கிறார்.

உனக்கு பெரிய குடும்பத்துல மருமகளா போய் வாழனும் அதானே ஆசை. அப்படி ஒரு மாப்பிள்ளையாய் இருந்தால் நீ கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவியா என கேட்க அது தான் இவ்வளவு நேரம் சொல்லிட்டு இருக்கேன் என வெண்பா சொல்கிறார். உடனே எங்க என் கூட வாங்க என தன்னுடைய கணவரை அழைத்துக் கொண்டு மேடைக்கு வருகிறார் சௌந்தர்யா. உங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் சொல்ல ஆசைப்படுகிறேன். இந்த நிமிஷத்திலிருந்து ரோஹித்தை நான் என்னுடைய மூன்றாவது பையனா தத்தெடுத்துக்கிறேன். இப்போ வெண்பா கேட்ட மாமனார், மாமியார், ரோகித்துக்கு கூட பொறந்த இரண்டு அண்ணன் அண்ணி அண்ணி குழந்தைங்க என கூட்டு குடும்பமாய் இருக்க குடும்பம் கிடைச்சிடுச்சு. எங்கள சம்மந்தியா ஏத்துக்க சம்மதமா என சர்மிளாவிடம் கேட்க அவரும் எனக்கு பரிபூரண சம்மந்தம் என சொல்கிறார்.

இதனால் கடும் அதிர்ச்சியாகும் வெண்பா என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார். சாந்தி இப்போதைக்கு சம்மதம் சொல்லுங்க கல்யாணத்துல பாத்துக்கலாம் என சொல்ல சர்மிளா பதில் சொல்லு வெண்பா என கேட்க அம்மா அமைதியா இருக்காங்களே அதிலேயே தெரியலையா சம்மதம் தான் என சாந்தி கூறுகிறார். பிறகு இருவரையும் உட்கார வைத்து மாலை மாத்தி நிச்சயதார்த்தம் முடிவடைகிறது.

அதன் பிறகு வெண்பா தனியாக உட்கார்ந்து இருக்க அங்கே வந்த கண்ணம்மா அவளை வெறுப்பேற்றுகிறார். ஒழுங்கா ரோகித்தை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ வழிய பாரு. இல்லனா இப்படித்தான் கடவுள் அடிக்கடி ஆப்பு வைப்பாரு என கூறுகிறார். இதனால் வெண்பா கடுப்பாகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 bharathi kannamma serial episode update

bharathi kannamma serial episode update