Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஹேமாவால் அதிர்ச்சியான பாரதி.. நடக்கப்போவது என்ன? இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இன்றைய எபிசோடில் வெண்பா செய்த வேலைகளை சர்மிளா புட்டு புட்டு வைக்கிறார். பொய் சொல்லி இருக்காங்க, நான் அப்படியெல்லாம் பண்ணுவேணா? என வெண்பா சொல்ல எனக்கு உன்ன பத்தி நல்லாத் தெரியும் டி, இன்னைக்கே இன்னொரு மாப்பிள்ளை பார்க்க வர சொல்லி இருக்கேன். உனக்கு லொகேஷன் மற்றும் அவர்களுடைய டிடெய்ல் அனுப்பி வைத்திருக்கிறேன் என கூறுகிறார்.

இந்த பக்கம் ஹேமா, லட்சுமி ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். லட்சுமி எல்லோருக்கும் சொன்ன ஆனா சமையல் அம்மாவுக்கு மட்டும் சொல்லல என சொல்ல மறந்திட்டேன் என வருத்தப்படுகிறார். சரி நான் சொல்லி விட்டேன் அம்மா கண்டிப்பாக வந்து விடுவார் என லட்சுமி கூறுகிறார். இந்த நேரத்தில் கண்ணம்மாவும் வந்துவிட அவரிடம் கண்ணீர் விட்டு சாரி கேட்கிறார் ஹேமா.

அதன் பின்னர் சௌந்தர்யாவும் வந்துவிட எல்லோரும் உள்ளே சென்று வருகின்றனர். இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். பிறகு அவரை மேடைக்கு அழைத்து பேச வைத்துள்ளனர். அதன்பிறகு பாரதி வருகைதர அவரை அழைத்து வந்து கண்ணம்மா பக்கத்தில் உட்கார வைக்கிறார் ஹேமா.

பின்னர் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வாங்கிய ஹேமாவை மேடைக்கு அழைக்கின்றனர். ஹேமாவை தனக்காக ஒரு முறை பேசி காட்டுமாறு கேட்டுக் கொள்கிறார் விக்ரம். பிறகு ஹேமா தன்னுடைய அப்பா பாரதி பற்றி பேச லட்சுமி தானே அங்கு நின்று பேசுவது போல நினைத்து பார்க்கிறார். அதன்பின்னர் என்னுடைய அப்பாவை மேடைக்கு அழைக்க ஆசைப்படுகிறேன் என சொல்லி பாரதியை மேடைக்கு அழைக்கிறார்.

பிறகு எனக்கு அம்மா இல்ல அந்த குறையை தீர்த்து வைத்தவங்க சமையல் அம்மாதான். அம்மா அப்பா மாதிரி இவங்க இரண்டு பேர் கையால நான் இந்த பரிசை வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என சொல்லி கண்ணம்மாவை மேடைக்கு அழைக்கிறார். ஹேமா இவ்வாறு சொன்னதைக் கேட்டு பாரதி அதிர்ச்சி அடைகிறார். பிறகு கண்ணம்மாவை சௌந்தர்யா மேடைக்கு அனுப்பி வைக்கிறார்.

மேடைக்கு வந்த கண்ணம்மாவும் பாரதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
bharathi kannamma serial episode update