bharathi kannamma serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் வீட்டில் சௌந்தர்யா அகிலன் மற்றும் சௌந்தர்யாவின் கணவர் வேணு என மூவரும் அமர்ந்து ஃபங்ஷனில் நடந்த பிரச்சனை குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அகிலன் வெண்பா பற்றி கண்ணம்மா சொன்ன விஷயத்தை பேச சௌந்தர்யா இந்த விஷயத்தை கண்ணம்மா அன்னைக்கே சொல்லி இருந்தா அந்த வெண்பாவுக்கு கொன்னு இருப்பேன். இப்ப ஏன் அவளை சும்மா விட போறதில்லை என கூறுகிறார்.
இந்த பக்கம் வெண்பா கண்ணம்மா கொலை செய்யும் முயற்சி செய்த விஷயத்தை சொன்னதால் சௌந்தர்யா கண்டிப்பாக எதையாவது செய்வார். அவங்க லேசு பட்ட ஆள் இல்லை என சாந்தியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு மறுநாள் பாரதி ஹேமாவிற்கு தலை வாரிவிட சௌந்தர்யா நான் பண்றேன்னு என கிட்ட போக பாரதி வேண்டாம் என தடுத்து விடுகிறார். பிறகு ஹேமாவை சாப்பிட வைத்து ஸ்கூலுக்கு கூட்டி செல்லும்போது பாரதியின் நடவடிக்கையால் தாத்தா பாட்டி கிட்ட சண்டை போட்டிங்களா என ஹேமா கேட்க அப்படினே வச்சுக்கோ என பாரதி கூறுகிறார். ஏன் எதுக்கு என கேள்வி கேட்டு தொலைக்க பாரதி அமைதியாக வா என சொல்லி கூட்டிட்டு இருக்கிறார்.
இந்தப் பக்கம் லட்சுமி கண்ணம்மாவை பேரன்ஸ் மீட்டிங்குக்கு அழைக்க கண்ணம்மா பர்மிஷன் போட முடியாது நான் மிஸ் கிட்ட போனில் பேசிக் கொள்கிறேன் என கூறுகிறார். பிறகு லட்சுமியை சமாதானம் செய்து ஸ்கூலுக்கு ரெடியாக சொல்லி விட்டு கண்டிப்பா இனி ஹேமாவ பார்த்து பேச பாரதி அனுமதிக்க மாட்டார் எப்படி அவளை பார்ப்பேன் எப்படி அவகிட்ட பேசுவேன் என கண்ணம்மா குழம்பி போக பிறகு அப்படியே ஏதாவது பண்ணட்டும் இந்த கண்ணம்மா யாருன்னு கேட்டேன். எது பண்ணாலும் நஷ்டம் அவருக்குத்தான் என கண்ணம்மா மனதுக்குள் சொல்லிக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…