Bharathi Kannamma Serial Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு ஜானகி மேடம் சௌந்தர்யாவிடம் பாரதி பற்றிய பாரதி மனைவி பற்றியும் கேட்டுக் கொண்டிருக்க அப்போது கண்ணம்மா தான் தன்னுடைய மருமகள் என இருவருக்கும் இடையேயான பிரச்சனை குறித்து மொத்த உண்மைகளையும் உடைக்கிறார். பாரதியையும் கண்ணம்மாவையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என ஜானகி மேடம் தன்னுடைய கணவரிடம் கூறுகிறார்.
அதன்பிறகு லட்சுமி ஹாஸ்பிடல் வந்து கண்ணம்மாவோடு பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் உள்ளே நுழைகிறார் ஹேமா. அவர் கண்ணம்மாவை உற்றுப் பார்த்துக் கொண்டே வந்து தூக்குங்கள் சமையல் அம்மா என கூறுகிறார். முத்தம் கொடுங்கள் என கேட்டு முத்தம் வாங்குகிறார். ஹேமாவின் இந்த நடவடிக்கைகளை பார்த்த கண்ணம்மா நான் தான் உன்னுடைய அம்மா என சொல்ல முடியாமல் தவியாய் தவிக்கிறார்.
அதன் பிறகு கண்ணம்மா சௌந்தர்யாவிடம் ஹேமா இப்படி நடந்து கொண்டது எனக்கு உடம்பிலிருந்து உயிரை மட்டும் பிச்சி எடுக்கிற மாதிரி இருக்கு என சொல்லி வருத்தப்படுகிறார். பிறகு ஜானகி மேடம் குடும்பத்தாருடன் கண்ணம்மா மற்றும் ஹேமா லட்சுமி என எல்லோரும் சேர்ந்து அவர் வேலை செய்த ஸ்கூல் அவர்கள் இருவரும் சந்தித்து காதலை சொல்லி ஒன்று சேர்ந்த பார்க், அதன் பிறகு அதே ஊரில் வசித்த வீடு உடைத்த இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றி காண்பிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…