Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாரதியை காப்பாற்றிய லட்சுமி.. குடும்பத்தினர் அதிர்ச்சி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

Bharathi Kannamma Serial Episode Update 30.03.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் லட்சுமி மற்றும் ஹேமா இருவரையும் ஸ்கூலுக்கு அனுப்ப தயார் செய்து கொண்டு இருக்கிறார் சௌந்தர்யா. அப்போது நம்மோடு யாரு வரா என லட்சுமி கேட்க பாட்டி தான் வருவாங்க என கூறுகிறார் ஹேமா. ஆனால் சௌந்தர்யா எனக்கு வேலை இருக்கு என கூறுகிறார். அதன் பிறகு பாரதி கீழே இறங்கி வர உங்க அப்பா வந்துட்டாரு பாரு, அவரையே கூட்டிட்டு போங்க என கூறுகிறார். பாரதி முதலில் வேலை இருக்கு என சொல்ல குழந்தைகள் ஆசையாக கெஞ்சி கேட்க ஒரு கட்டத்தில் சரி வரேன் என கூறுகிறார்.

பின்னர் சௌந்தர்யா இருவருக்கும் சாப்பாடு ஊட்டிவிட்டு கீழே செல்ல ஹேமா பாத்ரூம் சென்று விடுகிறார். இந்த நேரத்தில் லட்சுமிக்கு விக்கல் வந்து விடுகிறது. தண்ணீர் எடுத்து வர யாரும் இல்லாததால் பாரதியே அங்கிருந்து எழுந்து நகர ஃபேன் திடீரென அறுந்து கீழே விழுகிறது. இதனால் பாரதி மற்றும் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். பாரதி இதே போல் ஒருமுறை ஹேமாவால் காப்பாற்றப்பட்டதை நினைத்து பார்க்கிறார்.

இந்த பக்கம் கண்ணம்மா டூர் போக கூட என் பொண்ணுக்கு என்னால் பணம் கட்ட முடியவில்லை, முழு நேர வேலை ஏதாவது தேட வேண்டும் என வாய்தா வடிவுகரசி இடம் சொல்ல அவர் இதை அப்படியே சௌந்தர்யாவிடம் சொல்கிறார்.

பிறகு ஸ்கூலில் கண்ணம்மாவை பார்த்ததும் சமையல் அம்மா என ஓடி சென்று கட்டி கொள்கிறார் ஹேமா. மேலும் பாரதியை லட்சுமி காப்பாற்றிய விஷயம் பற்றி சொல்ல கண்ணம்மா பதறுகிறார். அதன் பிறகு அவரையும் டூருக்கு அழைக்க கண்ணம்மா எனக்கு நிறைய வேலை இருக்கு என கூறுகிறார். குழந்தைகள் அடம் பிடிக்க அதான் குழந்தைங்க கூப்பிடுறாங்களே வந்தா என்ன என திட்டுகிறார். நீங்கள் வந்தா தான் போவேன் என்று சொல்லி அடம் பிடிக்க ஒரு வழியாக கண்ணம்மா ஓகே என கூறுகிறார்.

பிறகு இவர்கள் பஸ்ஸில் ஏறி முற்படுகின்றனர். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 Bharathi Kannamma Serial Episode Update 30.03.22

Bharathi Kannamma Serial Episode Update 30.03.22