Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கண்ணம்மாவை திட்டிய பாரதி.. கண் கலங்கிய கண்ணம்மா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு ஜானகி மேடம் மற்றும் இருவரும் காணாமல் போய்விட ஆஸ்பிட்டலில் பாரதி கண்ணம்மா தான் காரணம் என சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் விக்ரம் அந்த இடத்திற்கு வர அவரிடம் நடந்த விஷயங்களை பாரதி கூறி அட்மினா அட்மின் வேலையை மட்டும் பார்க்க சொல்லுங்க இதுக்கு முழு பொறுப்பை கண்ணம்மா தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பாரதி கூறுகிறார்.

இன்னும் அரை மணி நேரத்தில் ஜானகி மேடம், ராமன் சார் இங்கே இருக்க வேண்டும் இல்லனா கண்ணம்மா மேல ஆக்சன் எடுக்க வேண்டும் என பாரதி கூறுகிறார். ஹாஸ்பிடலில் இருப்பவர்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு முறையாக தேடி இங்கேயும் காணவில்லை என வந்து சொல்ல கண்ணம்மா கலங்கி நின்றுள்ளார். இந்த நேரத்தில் இன்னொரு டாக்டர் ஓடி வந்து செய்தியில் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர்கள் கடற்கரை ஓரம் சடலமாக கிடப்பதாக சொல்வதைக் கேட்டு பாரதி ஒரு வேலை அவர்களாக இருக்குமோ என சந்தேகப்பட விக்ரம் அதற்கு வாய்ப்பே இல்லை என உறுதியாக கூறுகிறார்.

இந்த பக்கம் ஜானகி மேடம் தன்னுடைய கணவர் ராமனை அழைத்து வந்து ஒரு ஜிலேபி கடையில் அமர்ந்து தன்னுடைய உடம்புக்கு இருக்கும் பிரச்சனை குறித்து பக்குவமாக எடுத்துச் சொல்ல அவர் கணவர் அதிர்ச்சடைந்து அழுகிறார். இந்த பக்கம் கண்ணம்மா இவர்களை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அப்போது இருவரும் மருத்துவமனைகள் வந்த நுழைந்து எங்க மேல தான் தப்பு என மன்னிப்பு கேட்கின்றனர். நான் தான் இவரை வெளியே அழைத்துச் சென்று என்னுடைய உடல்நிலை குறித்து பக்குவமாக எடுத்து சொன்னேன். கண்ணம்மா மேல எந்த தப்பும் இல்ல அவ மேல யாரும் கோபப்பட வேண்டாம் என கூறுகிறார். பிறகு பாரதியிடம் ஆபரேஷன் பற்றி நாளைக்கு சொல்கிறேன் ஒரு நாள் மட்டும் டைம் வேண்டும் என கூறுகிறார்.

இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
bharathi kannamma serial episode update