தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோர்ட்டுக்கு போலீஸ் வெண்பாவை அழைத்து வந்த நிலையில் அவருடைய அம்மா நீ என்னுடைய கண்டிஷனுக்கு ஓகே சொன்னால் வெளியே வர முடியும். இல்லையென்றால் என்ன தண்டனையோ அது தான் கிடைக்கும். வக்கீலிடம் அப்படித்தான் பாயிண்ட்டுகளை எடுத்து வைக்க சொல்லியிருக்கேன். நீ சொல்லும் ஒரு வார்த்தை என்ன நடக்கும் என்பது இருக்கு என கூறுகிறார்.
அதன்பிறகு ஷர்மிளா வக்கீலை பார்க்க செல்ல உதவி வழக்கறிஞர் விலகல் மேடம் உங்க கிட்ட சொன்னது ரொம்ப சீரியஸான விஷயம். உங்க கிட்ட சொன்னேன் எதுவும் பொய்யில்லை அப்படித்தான் பாயின்ட்ஸ் எடுத்து வைக்க சொல்லியிருக்கார். இப்போ நீங்க சொல்லும் பதிலில் தான் உங்களுடைய வாழ்க்கை இருக்கிறது. இப்போதைக்கு அவர்கள் கண்டிஷனுக்கு ஓகே என்ன சொல்லுங்கள் பிறகு இந்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை என சொல்லி சொல்லி ஒரு வருடத்தை ஓட்டுங்கள் அதற்குள் அவர்களது மனதும் மாறலாம். அதுதான் உங்களுக்கு நல்லது என சொல்ல வெண்பாவும் அப்படியே ஷர்மிளா வந்ததும் உங்களது கண்டிஷனுக்கு ஓகே. நான் பாரதியை மறந்து விடுகிறேன். நீங்கள் யாரை சொன்னாலும் அவர்களை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறுகிறார். ஷர்மிளா ஓகே குட் என வெண்பா முடிவை பாராட்டுகிறார்.
இடப்பக்கம் பாரதியைப் பார்க்க ரொம்ப தூரத்திலிருந்து ஒரு தம்பதியினர் குழந்தையை அழைத்து வந்துள்ளனர். மருத்துவமனையில் வேலை அப்பாயிண்டமெண்ட் இல்லாமல் டாக்டரை பார்க்க முடியாது நாளைக்கு வாங்க என கூறுகிறார். கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க, இன்னைக்கு டாக்டரை பார்க்கணும் என அவர்கள் எவ்வளவு கெஞ்சியும் சம்மதிக்கவில்லை. இந்த நேரத்தில் அண்ணனா வந்து என்ன ஏது என விசாரித்து அவர்களை டாக்டரை பார்க்க அனுமதியுங்கள் என கூறுகிறார்.
பிறகு இவர்கள் உள்ளே சென்று டாக்டரை பார்க்கின்றனர். பாரதி சுட்டி கனமாக இருக்கும் அந்தக் குழந்தையோடு விளையாடி பரிசோதனை செய்து சில டெஸ்ட்டுகளை எடுக்க சொல்கிறார்.
ஸ்கூல் ஹேமா சமையல் அம்மாவை பார்க்காமல் அவர்கள் ஊட்டி விடாமல் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்கிறார். சௌந்தர்யா லட்சுமி என இருவரும் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. பிறகு லட்சுமி சரி இன்னைக்கு சாயங்காலம் நான் அம்மா வேலை செய்யும் ஹாஸ்பிடலுக்கு போகிறேன் என்னோட வா அம்மாவை பார்க்கலாம் என கூறுகிறார். சௌந்தர்யாவின் சரி அழைச்சிட்டு போறேன் என சொல்ல பிறகு சாப்பிட ஒப்புக்கொள்கிறார் ஹேமா.
இந்தப் பக்கம் கோர்ட்டில் இருதரப்பு வாதங்களைக் கேட்டு வெண்பா மீது எந்த தவறும் இல்லை அவரை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவிக்கிறது. இதனால் வெண்பா மகிழ்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 26.04.22