Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெண்பா செய்த செயல்.. ஷர்மிளாவுக்கு வந்த சந்தேகம்.. இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update 25-10-22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் வெண்பா மற்றும் பாரதி என இருவரும் ஷாப்பிங் சென்று இருக்க அப்போது இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென டி என் ஏ டெஸ்ட் கிளினிக்கில் இருந்து போன் வர இதை பார்த்து வெண்பா அதிர்ச்சி அடைகிறார். பிறகு பாரதியிடம் என்ன விஷயம் என கேட்க ஹாஸ்பிடலில் ஒருவருக்கு குழந்தை பிறந்தது என உண்மையைச் சொல்லாமல் மழுப்பி விடுகிறார்.

அதன் பிறகு வெண்பா காரில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்று விட பாரதி போன் போட்டு விஷயம் கேட்க மாலை 5 மணிக்கு ரிசல்ட் வந்துவிடும் என சொல்ல வந்ததும் போன் பண்ணுமாறு சொல்லி போனை வைக்கிறார்.

அடுத்து ஷர்மிளா கண்ணம்மா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க வந்திருக்க அப்போது வெண்பாவின் நடத்தையில் தனக்கு சந்தேகம் இருக்கிறது. அவ எதையும் அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுக்கிற பொண்ணு கிடையாது, கொஞ்சம் அவ மேல ஒரு கண்ணு வச்சுக்கோங்க என சொல்ல சர்மிளாவுக்கும் வெண்பாவின் மீது சந்தேகம் வருகிறது.

பின்னர் ரோஹித் தன்னுடைய அம்மாவை அழைத்துக் கொண்டு சர்மிளா வீட்டுக்கு வர அப்போது வெண்பாண்டாக ஜூஸ் எடுத்து வந்து எல்லோருக்கும் கொடுத்து மாமியார் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க ஷர்மிளாவுக்கு சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. உடனே ஷர்மிளா வெண்பாவின் ரூமுக்குச் சென்று நீ ஏதும் பிளான் பண்றியா என கேட்க வெண்பா நான் உனக்காக என்னையே மாற்றிக்கொண்டு இருக்கிறேன் என அழுது நடித்து டிராமா போட சர்மிளா சாரி கேட்டுவிட்டு வந்து விடுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update 25-10-22
bharathi kannamma serial episode update 25-10-22