Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாரதியின் காயத்திற்கு மருந்து போடும் கண்ணம்மா.. குடும்பத்தாருக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update 24-09-22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் கண்ணம்மா தூக்கம் வராமல் மொட்டை மாடியில் சென்று நின்று பாரதியுடன் பழைய நினைவுகளை அசை போட இந்த பக்கம் கண்ணம்மா தன்னை காப்பாற்றிய நினைவுகள் ஞாபகத்துக்கு வந்து தூக்கத்திலிருந்து எழுந்து கொள்கிறார் பாரதி. பிறகு அவரும் மொட்டை மாடிக்கு செல்ல அங்கு கண்ணம்மா இருப்பதை பார்த்து அவளிடம் பேச தொடங்குகிறார்.

தூங்கலையா என பாரதி கேட்க புது இடம் என்பதால் தூக்கம் வரவில்லை என கண்ணம்மா சொல்ல நீங்க தூங்கலையா என திருப்பி கேட்க சரியா தூக்கம் வரல ஏன்னு தெரியல என பாரதி கூறுகிறார். பிறகு பாரதி யாராக இருந்தாலும் தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதில் தான் குறியாக இருந்திருப்பார்கள் அப்படி இருக்கையில் நீ எப்படி என்னை காப்பாற்றின என கேட்க சில கேள்விகளுக்கு பதில் தெரியாது அப்படித்தான் அதுவும் என கண்ணம்மா கூறுகிறார்.

பிறகு என் அம்மா கொடுத்த உயிரை நீ திரும்ப காப்பாற்றி கொடுத்து இருக்க என சொல்லி நன்றி கூறுகிறார். கண்ணம்மா இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி, அதெல்லாம் தேவையில்லை என கூறுகிறார். பிறகு பாரதியின் காயத்துக்கு மருந்து போட்டு விடுகிறார்.

மறுநாள் காலையில் கண்ணம்மா எழுந்து வந்து லட்சுமி தூங்கிட்டு இருக்கா அவள் எழுந்ததும் நாங்க வீட்டுக்கு கிளம்பறோம் என சொல்ல சௌந்தர்யா அதுக்குள்ள என்ன அவசரம் என பேசிக்கொண்டு இருக்க ஷர்மிளா வீட்டுக்கு வந்து பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு பூங்கொத்து கொடுத்து தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்ததற்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்.

இந்த நேரத்தில் செய்தியில் கண்ணம்மா மற்றும் பாரதிக்கு விருது கொடுப்பதாக தகவல் வெளியாக குடும்பத்தோடு அதை பார்த்து சந்தோஷப்படுகின்றனர். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த மருத்துவமனைக்குள் துணிச்சலாக சென்று அமைச்சருக்கு ஆபரேஷன் செய்த பாரதிக்கு வீரதீர மருத்துவர் விருது அளிக்கப்படுகிறது. போலீசுக்கு தகவல் தெரிவித்து தீவிரவாதிகளை பிடிக்க பேருதவியாக இருந்த கண்ணம்மாவிற்கு வீரதீர பெண் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இதனால் அனைவரும் சந்தோஷப்பட இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update 24-09-22
bharathi kannamma serial episode update 24-09-22