Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லஷ்மி கேட்ட கேள்வி.. என்ன செய்யப்போகிறார் கண்ணம்மா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

Bharathi Kannamma Serial Episode Update 24.05.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு வீட்டுக்கு வந்த சௌந்தர்யா லட்சுமி கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. கண்ணம்மா படும் கஷ்டத்தை ஏற்க முடியவில்லை என கூறி வருத்தப்படுகிறார். ஆனால் நான் கேட்பதற்கு முன்பாகவே லட்சுமி பாரதிதான் என்னுடைய அப்பா என யாரிடமும் சொல்ல மாட்டேன் என எனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார் என்று கூறுகிறார்.

இந்தப் பக்கம் கண்ணம்மா காய்கறி செய்யும் போது விரலில் தட்டி பட்டு காயம் ஏற்பட உடனே பதறிப்போன லட்சுமி அவருக்கு மருந்து போட்டு விடுகிறார். பிறகு நாம எதுக்கு இங்க இருந்து கஷ்டப்படனும் நம்ப நம்ப வீட்டுக்கு போயிடலாம் என சொல்ல இதுதான் நம்ம வீடு வேற எங்க போக சொல்ற என கேட்கிறார். தாத்தா பாட்டி சித்தப்பா சித்தி எல்லோரும் இருக்க நம்ப அப்பா வீட்டுக்குப் போய் அப்பாவோட சந்தோஷமாக இருக்கலாம் என சொல்கிறார். உங்க அப்பாவா வந்து கூப்பிட வரைக்கும் நாம அந்த வீட்டுக்கு போகக்கூடாது என கண்ணம்மா கூறுகிறார் மேலும் இவ்வளவு விஷயம் தெரிஞ்சு எப்படி நீ மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு உன்ன நெனச்சு பெருமைப்படுறதா என்னுடைய கஷ்டத்தால் உன்னை கஷ்டப்படுத்துறேனு வருத்தப்படுவதா எனக்கு எதுவுமே புரியல என கூறுகிறார்.

பிறகு லட்சுமி விவாகரத்து பற்றி கேட்க இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் என கண்ணம்மா கேட்க அன்னைக்கு ஹாஸ்பிட்டலில் நீயும் அப்பாவும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன் என்று சொல்கிறார். நீயும் அப்பாவும் விவாகரத்து வாங்க கூடாது ஒரே வீட்டில் சந்தோஷமாக இருக்கனும் என லட்சுமி சொல்கிறார். ஏதாவது அதிசயம் நடந்து உங்க அப்பா விவாகரத்து பற்றி யோசிக்காமல் இருக்கணும் என கண் கலங்குகிறார். பெருசா எதாவது பண்ணனும் என கூறுகிறார்.

இந்த பக்கம் பாரதி வீட்டிற்கு வந்ததும் அவருக்கு ஆரத்தி எடுத்து டிஸ்ட்ரிக்ட் கழித்து சௌந்தர்யா பெருமையோடு பாரதி செய்த ஆபரேஷன் பற்றி பேசுகிறார். உன்ன பெத்த போது இருந்த சந்தோஷம் நீ முதல் மழையா டாக்டர் பட்டம் பெற்றபோது இருந்த சந்தோஷம், ஆப்ரேஷன் செய்த போது இருந்த சந்தோஷம், இதை விட தற்போது பலமடங்கு சந்தோஷமாக இருக்கிறேன் என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 24.05.22
Bharathi Kannamma Serial Episode Update 24.05.22