லக்ஷ்மியால் சௌந்தர்யா எடுக்கப்போகும் முடிவு.. நடக்கப்போவது என்ன? பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் வீட்டில் வேணு, சௌந்தர்யா என இருவரும் லட்சுமியுடன் முத்தத்தை கேட்டு வந்த பின்னர் அகிலன் அவர்களுக்கு மட்டும்தான் முத்தம்மா சித்தப்பாவுக்கு இல்லையா என கேட்டு அவரும் முத்தம் வாங்குகிறார். என்ன எல்லோரும் லட்சுமிக்கு முத்தமா கொடுக்குறீங்க, என்ன ஸ்பெஷல் என்று ஹேமா கேட்க அவர் நம்ம வீட்ல சமத்தா இருந்தா இல்லையா, உனக்கு பாடம் எல்லாம் சொல்லிக் கொடுத்தா அதனாலதான் என கூறுகிறார் சௌந்தர்யா.

அதன்பிறகு லட்சுமி வீட்டுக்கு கிளம்புகிறேன் என சொல்ல சௌந்தர்யா நானே அழைத்துக் கொண்டு போய் விட்டு வருகிறேன் என கூட்டிச் செல்கிறார். காரில் செல்லும் போது எல்லா விஷயமும் தெரிந்து கொண்டு எப்படி இவரால் அமைதியாக இருக்க முடிகிறது என எண்ணி கொண்டே செல்கிறார் சௌந்தர்யா. திடீரென லட்சுமிக்கு முத்தமழை பொழிகிறார். பின்னர் போகும் வழியில் கடை ஒன்றில் எழுதி லட்சுமிக்கு நிறைய விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கிறார்.

அதன்பிறகு லட்சுமி வீட்டுக்கு கிளம்புகிறேன் என சொல்ல சௌந்தர்யா நானே அழைத்துக் கொண்டு போய் விட்டு வருகிறேன் என கூட்டிச் செல்கிறார். காரில் செல்லும் போது எல்லா விஷயமும் தெரிந்து கொண்டு எப்படி இவரால் அமைதியாக இருக்க முடிகிறது என எண்ணி கொண்டே செல்கிறார் சௌந்தர்யா. திடீரென லட்சுமிக்கு முத்தமழை பொழிகிறார். பின்னர் போகும் வழியில் கடை ஒன்றில் எழுதி லட்சுமிக்கு நிறைய விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கிறார்.

வெண்பா வீட்டில் ஷர்மிளா ஜாலியாக பாட்டு கேட்டுக் கொண்டிருக்க அப்போது திரும்ப வந்து அவரை கூப்பிட கண்டும் காணாமல் இருக்கிறார். பிறகு நாளைக்கு யார் வராங்க என என கேட்க அதான் உன்னுடைய எடுபுடி சாந்தி எல்லாத்தையும் ஒட்டு கேட்டுட்டு வந்து உன்கிட்ட சொல்லி இருப்பாளே என சர்மிளா கூறுகிறார். உடனே வெண்பா யாரை கேட்டு மாப்பிள்ளை பார்க்க நீங்க என கேட்க அன்னைக்கு கோர்ட் வாசலில் நீ நான் பார்க்கிற மாப்பிள்ளையை கட்டிக்க சரி என்று தானே சொன்னேன் அதுக்கு அப்புறம் கூட நிறைய முறை இதைப் பற்றி நானே டிஸ்கஸ் பண்ணி இருக்கோம் என கூறுகிறார். யார் அந்த மாப்பிள்ளை என கேட்க மாப்பிள்ளை யாரு எப்படி இருப்பார் என்ன பண்றாரு எல்லாம் இப்ப சொல்ல மாட்டேன் நாளைக்கு நீ பாத்து தெரிஞ்சுக்கோ என கூறுகிறார்.

இந்தப் பக்கம் கண்ணம்மா லட்சுமிக்கு எல்லா உண்மையும் தெரிந்ததால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். அவகிட்ட நான் என்ன பதில் சொல்றது பெத்த பொண்ணு கிட்ட எல்லா விஷயத்திலும் மறைக்கிற மாதிரி வெச்சுட்டியே கடவுளே என அழுது கொண்டிருக்கிறார். பிறகு லட்சுமி வந்தது அவரை பிடித்து முத்தம் கொடுக்க என எல்லோரும் முத்தம் கொடுக்கறீங்க என்ன ஆச்சு என கேட்கிறார்.

அது எல்லாத்துக்கும் நான் பதில் சொல்கிறேன் என கண்ணம்மா பற்றியும் அவள் பட்ட கஷ்டங்களை எல்லாம் பார்த்து தனிப்பட்ட வேதனையைப் பற்றியும் லட்சுமியிடம் கூறுகிறார். இதையெல்லாம் கேட்டு புரியாதது போல் இருந்த லட்சுமி நீ எங்க அம்மா கிட்ட ஏதாவது பேசணுமா நான் கீழே இருக்கட்டுமா என கேட்கிறார். இல்ல நீ இங்கேயே இரு என்று சொல்லி விட்டு இனி நான் எதையும் மறைக்க போவதில்லை. எல்லா உண்மையையும் சொல்ல போகிறோம் என கூறுகின்றனர். பாரதி தானே உன்னுடைய அப்பா தெரிஞ்சும் நீ எப்படி அமைதியாக இருக்க என கேட்கிறார்.

கண்ணம்மா உங்களுக்கு எல்லாமே முன்னாடியே தெரியுமா எனக்கு லட்சுமி பாரதியின் அப்பா என கூப்பிட்ட தொடங்கியதும் தனக்கு சந்தேகம் வந்ததாகவும் ஸ்கூலில் அப்பாக்கள் பற்றி பேசியபோது லட்சுமி சொன்ன வார்த்தைகள் கேட்டு அது மீண்டும் உறுதியானதாக கூறுகிறார். அப்பா பற்றி கேட்டதும் லட்சுமி கதறி அழுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 21.05.22
jothika lakshu

Recent Posts

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

2 days ago

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…

2 days ago

‘கட்டா குஸ்தி 2’ பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…

2 days ago

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

2 days ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

2 days ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

2 days ago