அப்பாவின் முகவரியைத் தேடி செல்லும் லட்சுமி.. நடக்கப் போவது என்ன? பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு லட்சுமி கண்ணம்மாவிடம் கோபமாக பேச என்ன விஷயம்னு சொல்லாமே எதுக்கெடுத்தாலும் இப்போ அதிகமா கோபப்படுற என கண்ணம்மா சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் யாரோ ஒருவர் வீட்டைத் தேடி வருகிறார்.

பிறகு கண்ணம்மா யார் எனக்கேட்க ஓட்டெடுப்பு கணக்கெடுக்க வந்திருப்பதாக கூறுகிறார். வீட்டில் யார் யாரெல்லாம் இருக்கீங்க உங்க ஆதார் கார்டை கொடுங்க என கேட்க கண்ணம்மா எடுத்துக் கொடுக்கிறார். இதில் வேற முகவரி இருக்கே என கேட்க ஆமாம் இன்னும் முகவரி மாற்ற இது என்னுடைய பழைய வீட்டு அட்ரஸ் என சொல்கிறார். சீக்கிரம் மாத்திடுங்க, இப்ப மொபைல் போனிலேயே மாற்றலாம் என சொல்கிறார்.

இதை கவனித்த லட்சுமி அப்போ அம்மாவின் ஆதாரில் இருக்கும் முகவரி ஒருவேளை அப்பாவோட இருந்த முகவரியை இருக்கலாம் என முடிவு செய்து ஆதார் கார்டை தன் அம்மாவிற்கு தெரியாமல் எடுக்கிறார்.

மறுநாள் காலையில் ஸ்கூலுக்கு செல்லும் வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே ஸ்கூலுக்கு கிளம்பி விடுகிறார். ஹோம் ஒர்க் செய்யணும், நான் போய் என்னோட பிரண்ட்ஸோட செய்யறேன் என கண்ணம்மா விட பொய் சொல்லிவிட்டு இந்த முகவரியை தேடி செல்கிறார். பிறகு லட்சுமி கூடிப் போய் இறங்கியதும் ஆட்டோ டிரைவரை அனுப்பி விட்டு அந்த முகவரியை தேடி கிளம்பிச் செல்கிறார்.

இந்தப் பக்கம் லட்சுமி மீது சந்தேகப்படும் கண்ணம்மா சௌந்தர்யாவுக்கு போன் செய்து லட்சுமி செய்யும் செயல்களைப் பற்றிக் கூறி வருத்தப்படுகிறார். நீ நேரில் வா பேசிக்கொள்ளலாம் என சௌந்தர்யா கண்ணம்மாவை அழைக்கிறார். கண்ணம்மாவும் சரி என்று சொல்லிவிட்டு சௌந்தர்யா வீட்டிற்கு செல்கிறார்.

இந்தப் பக்கம் லட்சுமி தெருத்தெருவாக அலைந்து பலரிடம் இந்த முகவரி எங்கே இருக்கு என கேட்டு நடை பயணமாக சென்று கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் இது பாரதி டாக்டர் அங்கிள் வீட்டுக்கு வர முகவரி ஆச்சே, ஒருவேளை அதனாலதான் அப்பாவை அவருக்கு தெரியுமோ என நினைத்துக் கொண்டு இந்த முகவரியை தேடி செல்கிறார்.

இந்தப் பக்கம் கண்ணம்மா வீட்டுக்கு வந்ததும் நடந்ததை கூறி வருத்தப்படுகிறார். அகிலன் இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் அண்ணி கஷ்டப்படுவாங்க லட்சுமியை கூப்பிட்டு வச்சு நேருக்கு நேராக உண்மைகளைச் சொல்லி விடுவது தான் நல்லது என கூறுகிறார். கண்ணம்மாவும் ஒரு கட்டத்தில் நான் லட்சுமியுடன் எல்லா உண்மைகளையும் சொல்லப் போகிறேன் என சொல்ல சௌந்தர்யா அதிர்ச்சி அடைய அந்த நேரத்தில் பாரதி வந்து என்ன உண்மைய சொல்லப் போற என கேட்கிறார்.

லட்சுமி தன் அப்பா யாரென்று சொல்ல போகிறேன் என சொல்கிறார். அவருடைய அப்பா யாருன்னு எனக்கு தெரியும் உங்களுக்கும் தெரியும் என கண்ணம்மா சொல்ல ஆமாம் லட்சுமிக்கு அப்பா நான் இல்லை என்பது எனக்கு தெரியும் எனக்கும் தெரியும் என கூறுகிறார். ஒன்பது வருஷமா ஒரே விஷயத்தைப் போட்டு நம்பிக்கைக்கிட்டு இருக்கீங்க என பாரதி சத்தம் போடுகிறார். அதே பொய்யை நீதான் ஒன்பது வருஷமா நம்பிக்கிட்டு மனநோயாளியாக இருக்க என சௌந்தர்யா சொல்ல என்ன முட்டாள், நம்பிக்கை துரோகி, சந்தேக பிச்சைக்காரன் என்னால சொன்னீங்க இப்போ ஒரு டாக்டரையே நோயாளினு சொல்றீங்க என கூறுகிறார்.

இந்த பக்கம் லட்சுமி முகவரியைத் தேடிப் பிடித்து வந்தால் பாரதி வீட்டின் முன்பு தான் வந்து நிற்கிறது. இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Bharathi Kannamma Serial Episode Update 19.03.22
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago