Bharathi Kannamma Serial Episode Update 16.02.22
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. லட்சுமியிடம் எதற்கு அப்படி நடந்துகிட்ட என சௌந்தர்யா கேட்க வேற என்ன பண்ண சொல்றீங்க எனக்கு கரெக்டா இருக்க டிரஸ் எடுத்து கொடுக்க சொல்றீங்களா? அட்ரஸ் கொடுத்து இந்த அட்ரஸ் அதான் உங்க அப்பா இருக்காரு போய் பார்த்து கொள் என்று சொல்லி இருக்கணும் என பாரதி சொல்ல சத்தம் போடுகிறார் சௌந்தர்யா. வேற என்ன பண்ண சொல்றீங்க? நீங்கள் கண்ணம்மாவை என்னவா வேணா நினைச்சுக்கோங்க ஆனால் கனவுல கூட என் மனைவியா நினைக்காதீங்க அது இந்த ஜென்மத்துல நடக்காது. லட்சுமிக்கு நான்தான் அப்பானு ஒத்துக்க மாட்டேன் என கூறிவிட்டு உள்ளே செல்கிறார்.
இந்த பக்கம் பாரதி எட்டி உதைத்து விட்டு சென்ற பொருளை ஒட்ட வைத்துக் கொண்டிருக்கிறார் கண்ணம்மா. அந்த நேரத்தில் குமார் வர அவர் எப்படி உடைஞ்சிடுச்சு என்ன எது எனக் கேட்க கண்ணம்மா புரியாத புதிராக பதில் சொல்கிறார். பிறகு லட்சுமியும் வந்துவிட டாக்டரை பார்த்தியா டிரஸ் சூஸ் பண்ணி கொடுத்தார் என கேட்க கொடுத்தார் என லட்சுமி டிரசை எடுத்துக் காண்பிக்கிறார். அப்பா இவ்வளவு குண்டாக இருப்பார் நான் பாரதி டாக்டர் மாதிரி ஸ்லிம்மா பிட்டா இருப்பார் என்று நினைச்சேன். அப்பான்னு நினைக்கும்போதெல்லாம் எனக்கு அவர் தான் ஞாபகத்துக்கு வருகிறார் என சொல்கிறார். ஒண்ணுமில்ல கொழுப்பு அதிகமா ஆயிடுச்சு என கண்ணம்மா பாரதியை திட்டுகிறார்.
இந்தப்பக்கம் சௌந்தர்யா யோசனையில் இருக்க அப்போது பாரதி அவருக்கும் ஹேமாவுக்கும் பிளைட் டிக்கெட் புக் செய்கிறார். இதை அறிந்த சௌந்தர்யா இவர்களை எப்படி தடுத்து நிறுத்துவது என கணவர் மற்றும் மகன் அகில் உடன் கலந்தோசிக்கிறார்.
மருத்துவமனையில் பாரதி அமர்ந்து கொண்டு இருக்க நர்ஸ் ஒருவர் வந்து பிளைட் டிக்கெட்டை கொடுக்கிறார். அந்த நேரத்தில் வெண்பா வர அப்போது ஹைதராபாத்திற்கு டிக்கெட் போட்டு இருக்கிறேன் என சொல்கிறார். இங்க இருந்தா கண்டிப்பா கண்ணம்மா உடன் பிறந்த நாள் விழாவுக்கு என்னை கூட்டிட்டு போய் விடுவாங்க அதனால பிளைட் டிக்கெட் போட்டு விட்டேன் என சொல்கிறார். வெண்பா தனக்கும் பாரதிக்கும் சேர்த்து இரண்டு டிக்கெட் போட்டு இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்க பாரதி உனக்கு டிக்கெட் போட்டு இருக்கேனு நினைச்சா அது உனக்கு இல்லை என சொல்கிறார். என் பொண்ணு ஹேமாவுக்கு என சொல்கிறார்.
இப்ப இருக்கிற நிலைமையில உன்னோட ஹைதராபாத் போனா நான் ஜெயிச்சா தான் இருக்கணும். நான் உன் வீட்டுக்கு வர்றதுக்கு அந்த கண்ணம்மா என்ன பண்றான்னு பார்த்த இல்ல. தேவையில்லாத பிரச்சனை வேண்டாம் என பாரதி சொல்கிறார். இதனால் கடுப்பான வெண்பா அப்படியே சமாளித்துக்கொண்டு சரி நீ ஹைதராபாத் உன்னுடைய சந்தோசம் தான் எனக்கு முக்கியம் என சொல்கிறார். நீ போ பின்னாடியே அடுத்த பிளைட் பிடிச்சு நான் ஹைதராபாத் வரேன் என மனதுக்குள் பேசிக் கொள்கிறார்.
பள்ளியில் ஹேமா அவருடைய தோழி ஒருவரிடம் என் முன்னால ஸ்கூலுக்கு வரல என கேட்க என் அப்பாவுக்கு கல்யாணம் என சொல்கிறார். எனது அப்பாவுக்கு கல்யாணம் எனக் கேட்க ஆமா எங்க அம்மா நான் சின்ன வயசா இருக்கும்போதே இறந்துட்டாங்க எங்க அப்பா ரொம்ப கஷ்டப்படுறாரு அதனால அவருக்கு கல்யாணம் பண்ணி வைச்சேன் என கூறுகிறார். இதை கேட்ட ஹேமா பாரதிக்கும் இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கணும் என யோசிக்கத் தொடங்கி விடுகிறார்.
இந்த நேரத்தில் சமையல் அம்மா வந்து உங்க வீட்டில இருக்கு அங்க வரமாட்டாங்க அதான் நான் சாப்பாடு கொண்டு வந்தேன் என சொல்லி ஊட்டி விடுகிறார். ஹேமா இதே யோசனையில் சாப்பிடுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…