Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சௌந்தர்யாவை திட்டிய பாரதி..பாரதியை வெறுப்பேத்தும் வெண்பா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update 15-10-22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஹேமாவிடம் அந்த பாட்டி என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகி இருந்தா உன் வயசுல ஒரு பேத்தி இருந்திருப்பார் என சொல்ல உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ஒரு பெண் குழந்தை இல்லையா என ஹேமா கேட்கிறார். நீ என்ன சொல்ற என் பொண்ணு மாதிரி வேற யாரையும் பார்த்துட்டு பேசிட்டு இருக்க அவளுக்கு கல்யாணமே ஆகல, அதுக்குள்ள அந்த எமன் அவளை கூட்டிட்டு போய்ட்டான் என சொல்ல அப்போ அப்பா என்கிட்ட பொய் சொல்லி இருக்காரு என புரிந்து கொள்கிறார்.

அதன் பிறகு ஹேமா வீட்டுக்கு போகாமல் சமையல் அம்மா வீட்டுக்கு வந்து விட லட்சுமி ஹேமாவை பார்த்து உள்ளே கூட்டிச் செல்ல நான் இன்னைக்கு இங்கேயே இருக்கிறேன் நீங்க பாட்டிகிட்ட சொல்லிடுங்க சமையல் அம்மா என கெஞ்ச கண்ணம்மாவும் சரி என சொல்லிவிடுகிறார். பிறகு பொய் சொல்றவங்க நல்லவங்களா கெட்டவங்களா என ஹேமா கேட்க கண்ணம்மா எதுக்காக பொய் சொல்றாங்க என்பதை பொறுத்து தான் அது முடிவு செய்யப்படும் என சொல்ல லட்சுமி பொய் சொல்றது யாராக இருந்தாலும் கெட்டவங்க தான் என சொல்கிறார்.

அடுத்து பாரதி வீட்டுக்கு வர ஹேமா இல்லாததை பார்த்து சௌந்தர்யாவுக்கு போன் போட்டு கண்ணம்மா எதுக்கு அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போனா என சத்தம் போட நடந்தது என்னன்னு புரியாம பேசாத, ஹேமா தான் திரும்பவும் கண்ணம்மா வீட்டுக்கு போய் இங்கேயே இருக்கணும் சொல்லி இருக்கா, இதுல கண்ணம்மா மேல எந்த தப்பும் கிடையாது என சொல்லி போனை வைக்கிறார்.

அடுத்து வெண்பா போன் போட்டு டார்லிங் என பேசி பாரதியை வெறுப்பேத்துகிறார். ஐயரை போய் பார்த்ததாகவும் ரோகித்துக்கும் எனக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட தேதியிலேயே கல்யாணத்தை வச்சுக்கலாம் என சொன்னதாகவும் கூறுகிறார். கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு உனக்கு ஓகே தானே என கேட்க பாரதி மனம் இல்லாமல் சரியென சொல்கிறார். அடுத்ததாக ஹேமா கண்ணம்மாவிடம் அப்பா எனக்கு பர்த்டே பார்ட்டில கொடுத்த அந்த போட்டோவை பார்க்கும் போது எனக்கு ஒரு அம்மான்ற ஈர்ப்பு வரல என சொல்ல கண்ணம்மா நான் தான் உன் அம்மானு சொல்லி உன்னை கட்டி பிடிக்கனும் போல இருக்கு ஆனா சொல்ல முடியல என கண்கலங்கி எழுந்து சென்று விடுகிறார்.

ஹேமா சமையல் அம்மாவே என்னுடைய அம்மாவா இருந்திருக்கலாம் என நினைத்துப் பார்க்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிகிறது.

bharathi kannamma serial episode update 15-10-22
bharathi kannamma serial episode update 15-10-22