Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாரதியை நினைத்து வருத்தப்படும் குடும்பத்தினர். கடைசியில் காத்திருந்த ஷாக். இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதிக்கு பழைய நினைவுகள் ஞாபகத்தில் இல்லை அவர் எல்லாவற்றையும் மறந்து விட்டார் என டாக்டர் சொல்கிறார். அவருக்கு மீண்டும் பழைய நினைவுகள் வர நீங்களும் தான் உதவி செய்ய வேண்டும் என சொல்கிறார்.

பிறகு கண்ணம்மா சௌந்தர்யாவுக்கு போன் போட்டு பாரதி குறித்து விசாரிக்க அவன் பழசு எல்லாத்தையும் மறந்துட்டான் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அடுத்து பாரதி தூக்கத்தில் கண்ணம்மா கண்ணம்மா என புலம்ப அதை கேட்டு நர்ஸ் ஓடி வந்து டாக்டரிடம் விஷயத்தை சொல்ல பிறகு எல்லோரும் பாரதி பார்க்க போக பாரதி கண்ணம்மா கண்ணம்மா என புலம்புவது தெரிய வருகிறது.

டாக்டர் உடனடியாக அந்த கண்ணம்மாவை இங்கே கூட்டிட்டு வாங்க அவங்களால தான் பாரதியை பழையபடி மீட்டெடுக்க முடியும் என சொல்கிறார். பிறகு சௌந்தர்யா கண்ணம்மாவை வீட்டுக்கு சென்று அழைக்க குழந்தைகளும் நீங்க போங்கமா, அப்பா உன்னை பார்த்ததும் எல்லாமே அவருக்கு ஞாபகம் வந்துடும் என சொல்ல சௌந்தர்யா உங்ககிட்ட நடிச்ச கேக்குறேன் என பேச கண்ணம்மா வாங்க போகலாம் என ஹாஸ்பிடல் கிளம்பி வருகிறார்.

அடுத்து ஹாஸ்பிடலில் பாரதி கண்ணம்மாவை பார்த்தது லைட்டாக சிரிக்க பாரதிக்கு ஞாபகம் வந்துவிட்டது என எல்லோரும் சந்தோஷப்பட பிறகு டாக்டர் இது யாருன்னு தெரியுதா எனக்கு கேட்க பாரதி தெரியல என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
bharathi kannamma serial episode update