அப்பாவைப் பற்றி பாரதியிடம் கேட்ட லஷ்மி.. அதிர்ச்சியான பாரதி.. பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி வீட்டுக்கு வந்த கண்ணம்மா பாரதியை நீங்க கண்டிப்பா என்னுடைய பிறந்தநாள் விழாவுக்கு வரணும். நான் என்னோட பொண்ணுக்கு ஒரு வாக்கு கொடுத்து இருக்கேன் அதை நிறைவேற்றனும் என அழைக்கிறார். ஆனால் பாரதி முடியவே முடியாது அப்ப சொன்ன பதில் தான் இப்பவும். ஒரு சின்ன பொண்ணோட மனசுல ஆசையை வளர்த்து விட்டு அவளை ஏமாத்தாதே. கண்டிப்பா நான் அந்த விழாவிற்கு வரமாட்டேன். நேரா உன் பொண்ணு கிட்ட போயிட்டு நான் தப்பான வாக்குறுதி கொடுத்து விட்டேன் என சொல்லி அதை வாபஸ் வாங்கிடு மன்னிப்பு கேளு என கூறுகிறார். நீங்க வாங்க ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் என கண்ணம்மா கூப்பிட அங்கு எல்லார் முன்னாடியும் இவர்தான் என் புருஷன் இவர்தான் அப்பானு சொல்லப்போற அதானே. நான் வரமாட்டேன் என திட்டவட்டமாகக் கூறிவிட்டு மேலே செல்கிறார் பாரதி.

இந்த பக்கம் வெண்பா வீட்டில் இருக்க அந்த நேரத்தில் மாயாண்டி இருவருடன் வந்து பணத்தை கேட்கிறார். வசமாக சிக்கிய வெண்பா வேறு வழியில்லாமல் 5 லட்சம் ரூபாய்க்கு செக் எழுதிக் கொடுக்கிறார். இன்னொரு 5 இலட்சம் தேவைப்பட்டால் வரேன் என சொல்லிவிட்டு மாயாண்டி அங்கிருந்து கிளம்புகிறார்.

இந்தப் பக்கம் பாரதி மருத்துவமனையில் இருக்க அவருக்கு போன் செய்கிறார் லட்சுமி. மகா நடிகை என பெயர் வருவதை பார்த்த பாரதி முதல் முறையாக கட் செய்து விடுகிறார். திரும்பவும் போன் அடிக்க கோவமாக போனை அட்டென்ட் செய்ய இந்த பக்கம் லஷ்மி பேசுவதைக் கேட்டு அமைதியாகிறார். எனக்கு லட்சுமி டாக்டர் அங்கிள் உங்கள் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் அதனால தான் போன் பண்ணேன் என சொல்கிறார்.

என்ன விஷயம் என சொல்ல எங்க அம்மா பிறந்தநாள் விழாவில் எங்க அப்பா யாரென்று சொல்ல போறதா சொன்னாங்க ஆனா உங்களுக்கு எங்க அப்பா யாருன்னு முன்னாடியே தெரியுமாமே வடிவுகரசி ஆன்ட்டி சொன்னாங்க. எங்க அப்பா யாரு அங்கிள் அவர் எங்க இருக்காரு உங்களுக்கு அவரை தெரியுமா? அவர் எப்படி இருப்பார்? என்ன வேலை பண்றாரு? அவருடைய போன் நம்பர் உங்ககிட்ட இருக்கா? என கேட்க என்ன பதில் சொல்வது என தெரியாமல் பாரதி அதிர்ச்சி அடைகிறார். லட்சுமி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க டவர் கிடைக்காது போல நடித்து போனை கட் செய்து விடுகிறார். திரும்பவும் போன் செய்ய கட் செய்து விடுகிறார். இது வேற பார்க்கும்போதெல்லாம் கேட்பாரே என்ன பதில் சொல்லி சமாளிக்கிறது என பாரதி யோசிக்கிறார்.

இந்த பக்கம் கண்ணம்மா பாரதி இவ்வாறு சொன்னதை நினைத்து யோசனையில் இருக்க அப்போது வந்த வாய்தா வடிவுக்கரசி எங்க வெளியே போயிருந்த யார் கேட்க ஆமாம் அவரை பார்க்க போயிருந்தேன் என சொல்லி நடந்ததை சொல்லி வருத்தப்படுகிறார். ஜட்ஜ் அம்மா கிட்ட சொல்லி விடலாமா என வடிவுகரசி கேட்க அதெல்லாம் வேண்டாம். அப்படி பண்ண அவருக்கு என் மேல கோவம் தான் அதிகமாகும் என கூறுகிறார்.

இந்தப் பக்கம் சௌந்தர்யா ஹேமாவுக்கு ஒரு கதை சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் லட்சுமி போன் செய்கிறார். உடனே ஹேமா நான் பேசுறேன் என போனை அட்டெண்ட் செய்து பேச லக்ஷ்மி அம்மா உன்கிட்ட பேச தான் போன் பண்ணி நீயே எடுத்துட்ட. டாக்டர் அங்கிள் அங்கே இருக்காரா என கேட்கிறார். இல்ல அவர் வெளியே போயிருக்கார் என கூறுகிறார். பிறந்தநாள் விழாவில் எங்க அப்பா யாருன்னு எங்க அம்மா சொல்றதா சொன்னாங்க, ஆனா எங்க அப்பா யாருன்னு டாக்டர் அங்களுக்கு தெரியுமாம். அதைக் கேட்கத்தான் ஃபோன் பண்ணேன் ஆனா அவருக்கு டவர் சரியாக கிடைக்கவில்லை. அதான் அவர்கிட்ட பேசலாம்னு போன் பண்ணேன் என சொல்கிறார்.

இதைக் கேட்ட ஹேமா அப்படியா இதைப்பத்தி டாடி சொன்னதே கிடையாது நான் அவர் வந்ததும் கேட்கிறேன் என கூறுகிறார். வந்ததும் கேட்டுட்டு உடனே எனக்கு போன் பண்ணு என சொல்கிறார். அதன் பிறகு ஹேமா இதுபற்றி சௌந்தர்யாவிடம் கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்த நேரத்தில் சரியாக பாரதி வர உங்க அப்பாவே வந்துட்டான் அவன்கிட்டயே கேட்டுக்க என சௌந்தர்யா சொல்லிவிடுகிறார். இதை ஹேமா பாரதியிடம் கேட்க அவர் அதிர்ச்சி அடைகிறார். உனக்கு யார் இதை சொன்னது என அனைவரையும் பாரதி முறைக்க நாங்க எதுவும் சொல்லல என அகிலன் கூறுகிறார். லட்சுமி தான் போன் பண்ணி சொன்னா அவங்களுக்கு போன் பண்ணலாம் நீங்க பிசியா இருக்கீங்கனு சொன்னா. சொல்லுங்க டாடி லட்சுமியோட அப்பா யாரு என ஹேமா கேட்கிறார்.

உடனே பாரதி உனக்கு பேட்மிட்டன் ரொம்ப பிடிக்கும் தானே உனக்கு ஒரு பேட் வாங்கி வந்து வச்சிருக்கேன் மேல இருக்கு போய் பாரு என சொல்லி ஹேமாவின் கவனத்தை திசை திருப்பி விடுகிறார் பாரதி. ஒரு சின்ன குழந்தையை தூண்டி விட்டு இப்படி பண்றீங்களே என வீட்டில் சண்டை போடுகிறார் பாரதி. அந்த குழந்தைக்கு யாரு அப்பாவோ அந்த உண்மைய சொல்ல வேண்டியது தானே என பாரதி சத்தம் போடுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 12.02.22
jothika lakshu

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

2 hours ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

2 hours ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

3 hours ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

5 hours ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

5 hours ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

5 hours ago