Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லட்சுமியிடம் கோபமாக நடந்து கொண்ட ஹேமா. பாண்டி எடுத்த முடிவு. இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இன் இன்றைய எபிசோடில் கண்ணம்மாவை தடுத்து நிறுத்தி ஏதாவது ஒரு வகையில் உன்னுடன் பார்ட்னராக இருக்க விரும்புவதாக பாண்டி சொல்ல இதனால் கடுப்பான கண்ணம்மா பளாரென அறைந்து அவனை எச்சரித்து விட்டு வீட்டுக்கு கோபமாக வருகிறார்.

கோபமாக வந்த கண்ணம்மாவை தாமரை என்னாச்சு என விசாரிக்க நடந்த விஷயத்தை சொல்கிறார். அந்த பாண்டி ரொம்ப மோசமானவன் அவன் கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இரு என கூறுகிறார் தாமரை. அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை முடியப் போவதால் பாரதி லட்சுமி வீட்டுக்கு அனுப்பி வைக்க லட்சுமி நான் இங்கேயே இருந்தேன் என கண்கலங்க பாரதி கோர்ட்டில் சனி ஞாயிறு மட்டும் தான் என்னோட இருக்கணும்னு தீர்ப்பு சொல்லி இருக்காங்க. அதுவும் இல்லாம நீ என்னோடு இருந்துட்டா அம்மா ரொம்ப கஷ்டப்படுவாங்க என அறிவுரை கூறி அனுப்பி வைக்கிறார்.

வீட்டுக்கு வந்த லட்சுமியிடம் கண்ணம்மா எதுவும் பேசாமல் இருக்க ஹேமா இங்கே எதுக்கு வந்த அப்படியே போய் வேண்டியது தானே என கோபத்தை காட்டுகிறார். அத நீ ஒன்னும் சொல்லாதே அம்மா சொல்லட்டும் என கண்ணம்மாவிடம் லட்சுமி அழுது கொண்டே பேச உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்லை ஐ லவ் யூ லட்சுமி என்ன கண்ணம்மா சொல்ல லட்சுமி கட்டிப்பிடித்துக் கொள்கிறார். இவளுக்கு ஐ லவ் யூ சொல்றீங்க என ஹேமா கோபப்பட்டு எழுந்து சென்று விடுகிறார்.

அடுத்து பாண்டி தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருக்கும்போது அந்த கண்ணம்மாவை அசிங்கப்படுத்த நண்பர் ஒருவர் ஐடியா சொல்கிறார். என்ன அறைந்து அசிங்கப்படுத்தின கண்ணம்மாவை நான் தொடாமலேயே அசிங்கப்படுத்தனும் என முடிவெடுக்கிறார் பாண்டி. அதற்காக திட்டம் ஒன்றை தீட்டுகிறார்.

மறுநாள் காலையில் பாண்டி கல்யாண மண்டபத்தில் மணமகன் அறைக்குள் இருக்க கண்ணம்மா ஸ்வீட் செய்வதற்கான பொருளை எடுக்க உள்ளே செல்கிறார். இந்த விஷயம் பாண்டிக்கு நண்பர்கள் போன் மூலமாக சொல்ல கண்ணம்மா உனக்கு இன்னைக்கு இருக்கு என மனதுக்குள் கணக்கு போடுகிறார் பாண்டி. இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update

bharathi kannamma serial episode update