Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விவாகரத்துக்கு சம்மதித்த பாரதி. கண்ணம்மா எடுத்த முடிவு. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணம்மா விவாகரத்து வாங்குவதில் உறுதியாக இருக்க பிறகு நீதிபதி பாரதியிடம் கேட்க அவரும் எனக்கும் விவாகரத்து வேண்டும் என்று சொல்ல கண்ணம்மா உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

சௌந்தர்யா எழுந்து நின்று பாரதி வெளியில இருக்கிற வரைக்கும் சேர்ந்து வாழணும்னு தான் சொல்லிட்டு இருந்த இப்ப எதுக்கு மாத்தி பேசுற என சத்தம் போட நீதிபதி உங்களை யார் உள்ள விட்டது இது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் வெளியே போங்க என வெளியே அனுப்புகிறார். பிறகு இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட பாரதி என்னுடைய குழந்தைகளை பார்க்க அனுமதி வேண்டும் என கேட்க கண்ணம்மா அனுமதி தரக்கூடாது என சொல்ல நீதிபதி சனி, ஞாயிறுகளில் குழந்தைகளை பார்த்து அவர்களுடன் நேரத்தை செலவிடலாம் என சொல்கிறார்.

பிறகு இருவரும் வெளியே வந்ததும் கண்ணம்மா நீங்க எனக்கு இவ்வளவு சீக்கிரம் விவாகரத்து தருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை என சொல்ல நீ ஆசைப்பட்ட நான் கொடுத்தேன். ஆனா ஸ்டில் ஐ லவ் யூ என கூறுகிறார். அடுத்து பாரதி சௌந்தர்யாவிடம் வர அவர் எதுக்குடா இப்படி பண்ண என கண்ணீர் விட்டு நியாயம் இருந்ததா தோனிச்சு அதனால விவாகரத்து கொடுத்துட்டேன் என கூறுகிறார்.

அதன் பிறகு கண்ணம்மா வர ஏன் கண்ணம்மா இப்படி வர இன்னும் கொஞ்சம் யோசிச்சு முடிவெடுத்து இருக்கலாம் என கூறுகிறார். நான் பலமுறை யோசித்து தான் இந்த முடிவு எடுத்தேன் இருந்தாலும் என்னை மன்னிச்சிடுங்க என சொல்கிறார். இதுவரைக்கும் உங்க வாழ்க்கையில எனக்கு இடம் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி என்ன சொல்லி கண்ணம்மா அங்கிருந்து கிளம்புகிறார்.

பிறகு வீட்டுக்கு வந்ததும் எல்லோரிடமும் விவாகரத்து கிடைத்த விஷயம் பற்றி சொல்ல டாக்டரும் இதுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டாரா என கேட்க அவரும் சம்மதம் சொன்னதுனால தான் கிடைத்ததாக கூறுகிறார். அதன் பிறகு சனி ஞாயிறுகளில் குழந்தைகளை பார்க்க அனுமதி கொடுத்திருப்பதாக சொல்ல அதுக்கு நாங்க ஆசைப்பட்டா தானே முடியும் எங்க ரெண்டு பேருக்குமே அதுல விருப்பம் இல்லை என ஹேமா கூறுகிறார்.

பிறகு தாமரை புருஷன் பொண்டாட்டி புள்ள சண்டை சச்சரவு எல்லாம் சாதாரண விஷயம் அதுக்கு போய் இப்படி விவாகரத்து தரலாமா என சொல்ல இது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை இதில் யாரும் தலையிடாதீங்க என கண்ணம்மா கூறி விடுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
bharathi kannamma serial episode update