Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாரதியை வெறுப்பேற்றிய கண்ணம்மா. பாரதி எடுத்த முடிவு. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாரதி கண்ணம்மாவிடம் சென்று இந்த ஊருக்கு ஹாஸ்பிடல் வரும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் உன் அவர் இடம் முடிந்த பிறகு நான் சாப்பிடும் சாப்பாடு கையால் செய்ததாக இருந்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன் என பேச்சு கொடுக்க கண்ணம்மா பதில் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க பாரதி அங்கிருந்து திரும்பி வந்து விடுகிறார்.

அடுத்து லட்சுமி பாரதிக்கு அழகு சுந்தரம் தாத்தா போனில் இருந்து போன் போட்டு நீங்க இப்படி பட்டினியா இருந்தா உங்க உடம்புக்கு ஏதாவது ஆகிடும் இப்படி எல்லாம் பண்றீங்க என சொல்ல பாரதி எனக்கு ஒன்னும் ஆகாது, நீ கவலைப்படாத என சொல்கிறார்.

இரவு நேரம் ஆனதும் பாரதியை வெறுப்பேற்றுவதற்காக கண்ணம்மா ஹோட்டலில் இருந்து பிரியாணி வாங்கி வந்து நிலா சோறு சாப்பிடலாம் என குழந்தைகள் மூவர் மற்றும் தாமரையை வெளியே உட்கார வைத்து பிரியாணி சாப்பிட்டு வெறுப்பேத்துகிறார். லட்சுமி பாதியில் எனக்கு வேண்டாம் வயிறு சரியில்ல என சொல்லி எழுந்து சென்று விடுகிறார்.

அதன் பிறகு மறுநாள் காலையில் ஊர் பெரியவர்கள் நீங்க இன்னும் போகலையா என சொல்லி கேட்க பாரதி நான் போகமாட்டேன் என்ன போக சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல நான் முறைப்படி அனுமதி வாங்கி இந்த ஊருக்குள்ள வந்து இருக்கேன் என சொல்கிறார். கணபதியிடம் நீயாவது எடுத்து சொல்லலாம் என கேட்க அவர் வாய் திறக்காமல் இருக்க பிறகு வாயிலிருந்து பெரிய பன் வந்து கீழே விழுகிறது. இதனால் ஊர்மக்கள் பொய்யாக உண்ணாவிரதம் இருப்பதாக நினைத்துக் கொண்டு திட்டிச் செல்கின்றனர்.

பிறகு கண்ணம்மா கணபதியிடம் இப்படி எல்லாம் பண்றது நல்லா இல்ல ஒழுங்கா ஊரு போய், பிழைக்கிற வேலைய பாருங்க என எச்சரித்து பேச சத்தியமா பாரதி இன்னும் பச்ச தண்ணி கூட குடிக்கல என்ற உண்மையை கூறுகிறார். பிறகு கணபதி நான் ஊர் பக்கம் போறேன் என சொல்ல பாரதி அவரை தடுத்து நிறுத்தி கூடவே இருக்குமாறு கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
bharathi kannamma serial episode update