தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஸ்கூலில் ஆசிரியர் ஒருவர் நாளைக்கு வரும்போது பர்த் சர்டிபிகேட் எடுத்துட்டு வர வேண்டும் என மாணவி ஒருவரிடம் கூறுகிறார். மேலும் அவர் பர்த் சர்டிபிகேட் என்றால் என்ன எனவும் கூறுகிறார். இந்த விளக்கத்தைக் கேட்ட லட்சுமி நம்மளுடைய பர்த் சர்டிபிகேட் அப்பா பெயர் முகவரி எல்லாம் இருக்கும் இதை எப்படி அம்மாவிடம் கேட்பது என யோசிக்கிறார். உடனே அம்மாவிடம் உனக்கும் பர்த் சர்டிபிகேட் இருக்கும் இல்லையா? உங்க அப்பாகிட்ட எந்த ஆஸ்பிடல்ல பிறந்தேன் நீ கேளு நானும் அந்த ஹாஸ்பிடலில் தான் பிறந்தேனானு கேளு என கூறுகிறார்.
ஹேமா நீங்கதான் சின்ன வயசுல ஊர்ல இருந்தீங்களே. அப்போ எப்படி ஒரே ஆஸ்பிடல்ல பொறந்து இருக்க முடியும் என கூறுகிறார். ஆமாம் நான் அத மறந்துட்டேன் என லஷ்மி அமைதியாகி விடுகிறாள். இந்த பக்கம் காரில் வந்த பாரதி கார் ரிப்பேராகி விட அதை பரிசோதித்து கொண்டிருக்கும் போது பிக்பாக்கெட் ஒருவர் காரில் இருந்து அவருடைய பர்ஸ் மறந்து போனை கையில் எடுத்துக் கொண்டு ஓட முயற்சி செய்தபோது கண்ணம்மா அதனை பார்த்து விட்டு அவரை ஓடிச் சென்று பிடிக்கிறார். இருவருக்குமிடையே சண்டை நடக்க அவர் கண்ணம்மாவை கத்தியால் குத்த வருகிறார். இதைப் பார்த்து பார்வதி ஓடிச் சென்று வந்த ரவுடி உடன் சண்டை விட ஒரு கட்டத்தில் பாரதியை அவர் கத்தியால் குத்த வர கண்ணம்மா குறுக்கே சென்று கையில் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்.
உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேண்டாம் ரவுடி பையன் கூடையும் உனக்கு ஏன் பிரச்சனை என கேட்க உங்க போனையும் பர்ஸையும் தூக்கிட்டு ஓடினான் என்ன சொன்ன என்ன லூசு மாதிரி உணர என்னோடுதான் கார இருக்கு என பாரதி ஓடிச்சென்று காரை பார்க்க அதில் இரண்டுமே இல்லை. எதையுமே நம்பறது கிடையாது நீங்களா ஒண்ணு புரிஞ்சிக்கிட்டு பேசுறது என கண்ணம்மா கூறுகிறார். பிறகு கண்ணம்மாவுக்கு முதலுதவி செய்து அவரை அடுத்தடுத்து கூப்பிட வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் உங்களுக்கு எதுக்கு சிரமம். அப்புறம் நான் உங்களிடம் பேச தான் இப்படி பண்ணினே என்று சொல்லி விடுவேன் வேண்டாம் என சொல்லிக்கொண்டே மயங்கி விழுகிறார்.
இதனால் பதறிய பாரதி அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார். அங்கு பாரதியை பார்ப்பதற்காக வெண்பா வந்திருக்க அப்போது கணவரோடு அவர் மருத்துவமனைக்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறார். கண்ணம்மாவை உள்ளே தூக்கிச் சென்று விழுந்து விழுந்து கவனித்ததை பார்த்து அவர் கடுப்பாகிவிட்டார்.
என்கிட்ட வந்து கண்ணம்மாவை பிடிக்கல புலம்ப வேண்டியது. ஆனா இங்க தொட்டு தொட்டு இருந்து பார்த்துட்டே இருப்பேன் என வெறுப்பாகி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இந்த பக்கம் வீட்டுக்கு வந்த லட்சுமி கண்ணம்மாவை ஆளை காணவில்லை என தேடி பார்க்கிறார். பிறகு குமார் அண்ணா கண்ணம்மாவுக்கு போன் செய்ய அவர் போனை எடுக்கவில்லை.
திரும்பவும் கண்ணம்மா போனை எடுத்து அவருடைய ஆஸ்பிட்டலில் தான் இருக்கிறேன் கொஞ்சம் நீங்க வாங்க என கூறுகிறார். இதனால் லட்சுமியை வாய்தா வடிவுகரசி வீட்டில் விட்டுவிட்டு கிளம்புகிறார் குமார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
