Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கண்ணம்மா வீட்டிற்கு வந்த பாரதி குடும்பம். காத்திருந்த அதிர்ச்சி. இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி தன்னுடைய குடும்பத்துடன் கண்ணம்மாவை தேடி வீட்டுக்கு வர வீடு பூட்டி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு வீட்டு வாசலில் ஒரு லெட்டர் தங்க அந்த லெட்டரை எடுத்து படித்த போது அதில் கண்ணம்மா எங்களை யாரும் தேட வேண்டாம் தொந்தரவு செய்ய வேண்டாம் என எழுதி வைத்திருப்பதை பார்த்து எல்லோரும் கண்கலங்க பாரதி என்னை விட்டுட்டு எங்க போன கண்ணம்மா என அழுகிறார்.

கண்ணம்மா நம்ம வீட்டுக்கு வரலைன்னா நான் அவ வர வரைக்கும் இந்த வீட்டிலேயே இங்கேயே இருக்கலாம் என்று முடிவு பண்ணி தான் நான் இங்கே வந்தேன் என கலங்குகிறார் பாரதி. ஜெயிலில் வெண்பா உன்ன சும்மா விடமாட்டேன் கண்ணம்மா நீ ஜெயிச்சது மட்டும் நினைக்காதே என தனியாக பேசிக்கொண்டு இருக்க அப்போது அவளை ஜெயில் வார்டன் எச்சரிக்கிறார்.

அடுத்து இந்த பக்கம் பாரதி குடும்பத்தினர் கண்ணம்மாவை ரோடு ரோடாக தேடிக் கொண்டிருக்க கண்ணம்மா வேலையையும் ரிசைன் செய்து விட்டதாக பாரதிக்கு போனில் தகவல் கிடைக்கிறது. இதனால் பாரதி இன்னும் அதிர்ச்சி அடைகிறார். மறுபக்கம் கண்ணம்மா தன்னுடைய அப்பாவின் சொந்த ஊருக்கு குழந்தை மற்றும் அப்பாவுடன் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறார். அவரது சொந்த ஊரில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்க ஊரில் விசாரிக்கின்றனர்.

இந்த பக்கம் வீட்டில் பாரதி மற்றும் அனைவரும் வருத்தமாக இருக்க அஞ்சலி அக்கா இருந்த வேலையும் விட்டுட்டா குடும்ப செலவுக்கு என்ன பண்ணுவான் குழந்தைகளை எப்படி வளர்க்க போற எங்க போனான்னு தெரியல என பேச வேகமாக மாடிக்கு போகும் பாரதி பேக்கில் துணிகளை எடுத்துக் கொண்டு கண்ணம்மாவை தேடி போகப் போவதாக குடும்பத்திடம் சொல்ல அனைவரும் ஷாக்காகின்றனர்‌. இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
bharathi kannamma serial episode update