வெண்பா மீது கோபத்தில் பாரதி. அனைவருக்கும் தெரிய வந்த உண்மைகள். இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் வெண்பா பாரதிக்கு குழந்தை பிறக்காது என சொல்லிக் கொண்டிருக்க சௌந்தர்யா இதுல தலையிட உனக்கு எந்த உரிமையும் கிடையாது கண்ணம்மா வா நம்ப வீட்டுக்கு போகலாம் என சொல்ல இருங்க அத்தை அவர் முகம் பிரகாசமா இருந்துச்சு வெண்பா பேச ஆரம்பித்ததும் சுருங்கி போச்சு. வீட்டுக்கு போனதும் திரும்பவும் யோசிச்சு லாஜிக் என்று ஏதாவது பேசினாலும் பேசுவாரு எதுவாக இருந்தாலும் இங்கேயே பேசி தீர்த்து விடலாம் என கூறுகிறார்.

இதையடுத்து பாரதி நான் எதுவும் பேச மாட்டேன் வீட்டுக்கு போகலாம் என சொல்ல அப்படி எல்லாம் இதனால் விடமாட்டேன் என வெண்பா கூறுகிறார். நான் சொன்னதுல ஏதாவது தப்பு இருந்தா இங்க இருந்து ஒருத்தர் சொல்லுங்க கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தைகள் பாரதியுடன் தான் என ஒரே ஒரு லாஜிக் சொல்லுங்க நான் ஒத்துக்குறேன் என பேச அப்போது செல்வம் நான் சொல்லட்டுமா என என்ட்ரி கொடுக்கிறார்.

அடுத்து செல்வம் பாரதியிடம் மன்னிப்பு கேட்டு அன்னைக்கு வெண்பாவிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு ரிசல்ட் மாற்றி வைத்த விஷயத்தை போட்டு உடைக்க பாரதி அதிர்ச்சி அடைகிறார். ஆனால் வெண்பா அவன் சொல்வதெல்லாம் பொய் நம்பாத பாரதி என நாடகம் போடுகிறார். உன்னை யார் இப்படி எல்லாம் பேச சொன்னது எவ்வளவு பணம் கொடுத்தாங்க சொல்லு என செல்வத்தை நச்சரிக்கிறார். மேலும் இதுக்கெல்லாம் ஆதாரம் என்ன இருக்கு என கேட்க ஆதாரம் நான் இருக்கேன் என துர்கா என்ட்ரி கொடுக்கிறார்.

அதன் பிறகு துர்கா வெண்பா தன்னிடம் வந்து பாரதிக்கு கண்ணம்மா துரோகம் செஞ்சுட்டா அதனால அவன் அவளை கொலை செய்ய சொன்னான் என சொல்லி பணத்தை கொடுத்து தன்னை கூலிப்படையாக அனுப்பிய விஷயத்தை கூறுகிறார். முதலில் கண்ணம்மாவை கொல்ல வந்து பிறகு கண்ணம்மா மீது எந்த தப்பும் இல்லை உங்களுக்கும் இந்த கொலை திட்டத்திலும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிந்து கொண்டு கண்ணம்மாவிற்கு காவலாளியாக மாறினேன்.

அடுத்து வெண்பாவின் சித்தப்பா உங்களுக்கு எல்லா உண்மைகளையும் சொல்ல முயற்சி செய்ய அப்போது அவரையும் கொன்று விட்டாள். கண்ணம்மாவை பலமுறை காப்பாற்றிய என்னை வெண்பாவின் அடியாட்கள் ஒரு ரூமில் கட்டி வைத்திருந்தனர். அது எல்லாம் மீறி தப்பித்த போது தான் எனக்கு ஒரு கால் போய்விட்டது.

இப்போ உங்களிடம் எல்லா உண்மைகளையும் சொல்லணும்னு தான் இன்னைக்கு தான் வடமாநிலத்தில் இருந்து சென்னை வந்தேன் என நடந்த விஷயங்களை சொல்ல பாரதி எதுக்கு இப்படி துரோகம் பண்ண என வெண்பாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க வெண்பா பதில் சொல்லாமல் சிரிக்கிறார். வெண்பா சிரிக்க சிரிக்க பாரதி கோபம் அதிகமாக்கிக் கொண்டே செல்கிறது. இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
jothika lakshu

Recent Posts

Mayil Veera Lyric Video

Mayil Veera Lyric Video | Sardar 2 | Karthi | Malavika Mohanan | PS Mithran…

10 hours ago

FATHER Official Teaser

FATHER Official Teaser | Darling Krishna | Prakash Raj | R Chandru | Raja Mohan…

10 hours ago

Paranthu Pogum Manase Lyric Video

Paranthu Pogum Manase Lyric Video | XY | Maayavan Cinematic Universe | Chinmayi | C.V.…

10 hours ago

Kudikara Nenju Lyric Video

Kudikara Nenju Lyric Video | Hi | Nayanthara, Kavin | Dhruv Vikram | Jen Martin…

10 hours ago

கரீனா கபூர் 3-வது முறை கர்ப்பமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…

2 days ago

“வாழ்க்கையில் உடைந்து போயிருந்தேன்; என்னை மீட்டது ‘ஒன்ஸ்மோர்’ தான்!” – அதிதி ஷங்கர்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…

2 days ago