ஹேமாவால் வாய்தா வடிவுக்கரசியிடம் புலம்பிய கண்ணம்மா.. வெண்பாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கண்ணம்மா வாய்தா வடிவுகரசியிடம் ஹேமா ஸ்கூலில் நான்கு பேரும் ஒரே குடும்பமாக ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ வேண்டும் என எழுதி இருந்ததையும் அதை பற்றி மிஸ் தன்னிடம் வந்து பேசியது குறித்தும் கூறுகிறார். நல்ல விஷயம் தானே என வாய்தா வடிவுகரசி சொல்ல இதுவே பாரதியிடம் போய் சொன்னால் ஹேமாவை என்னிடம் நெருங்க விடாமலும் லட்சுமியிடம் அவர் விலகிச் சென்று விடுவார் என கூறுகிறார். இமயமலை மாதிரி இருக்க இந்த பிரச்சனை முடிவுக்கு வராது என கண்ணம்மா வருத்தப்படுகிறார். நல்லதே நினை நல்லதே நடக்கும் இந்த பிரச்சனை பனி மலை போல உருகி விடும் என நினைத்துக் கொள் என கூறுகிறார்.

இந்த பக்கம் வீட்டில் எல்லோரும் அமர்ந்து கொண்டிருக்கும் போது ஹேமா ஓடிவந்து பாட்டி உங்களிடம் ஒன்னு சொல்லனும் என சொல்லி டூர் போயிருந்த இடத்தில் நான்கு பேரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோவை ஹாலில் புதிதாக பிரேம் போட்டு மாற்ற வேண்டும் என சொல்கிறார். போட்டோவை பார்த்து அனைவரும் சந்தோஷ படுகின்றனர். பிறகு சௌந்தர்யா ரொம்ப பெரிசா பிரேம் போட்டு மாட்டலாம் என சொல்கிறார்.

அதன் பின்னர் எல்லோரும் எழுந்து சென்று விட சௌந்தர்யாவுக்கு மீண்டும் மர்ம நபரிடம் இருந்து மெசேஜ் வர யாரென தெரியாமல் குழம்புகிறார். மீட் பண்ணலாமா என கேட்க கடுப்பான சௌந்தர்யா இன்னைக்கு உனக்கு இருக்குதா தரதரவென்று இழுத்துப் போய் போலீஸ் ஸ்டேஷன்ல விடுவேன் என நினைத்து மீட் பண்ணலாம் என சௌந்தர்யா கூறுகிறார்.

இந்த பக்கம் வெண்பாவுக்கும் மர்ம நபரிடமிருந்து தொடர்ந்து போன் வர அவரும் பதறுகிறார். இவ்வளவு நாளா இல்லாம இப்போ எதுக்கு போன் பண்றாங்க என அலறுகிறார். சாந்தி யார் யார் எனக்கேட்க எதுவும் சொல்லாமல் சாந்தியை திட்டி விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறார்.

சௌந்தர்யா அவரைப் பார்ப்பதற்காக காபி ஷாப் செல்ல அங்கு போய் பார்த்தால் அவருடைய நண்பர் விக்ரம் இருக்கிறார். விக்ரமின் தன்னுடைய கணவர் வேணுவும் சேர்ந்துதான் பிராங்க் செய்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்கிறார். பிறகு விக்ரமிடம் நலம் விசாரிக்கிறார். இவ்வளவு நாள் எங்க இருந்த எப்ப வந்த எனக் கேட்க இவ்வளவு நாளாக அமெரிக்காவில் இருந்தேன், அங்கேயே செட்டில் ஆகிவிட்டேன். மத்தவங்களுக்காக வாழ்விலும் ஏதாவது செய்யணும்னு தோணுச்சு அதனாலதான் இந்தியா கிளம்பி வந்து விட்டேன் என கூறுகிறார்.

பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் எப்படி இருக்காங்க என கேட்க தான் கல்யாணமே பண்ணிக்கல சிங்கிளாக இருக்கிறேன் என சொல்ல சௌந்தர்யா அதிர்ச்சி அடைகிறார். ஏனென கேட்க கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணல அதனால் பண்ணல அதனால பண்ணிக்கல என கூறுகிறார். பிறகு வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார். விக்ரமும் கண்டிப்பாக வருவேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 05.04.22
jothika lakshu

Recent Posts

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

13 hours ago

இட்லி கடை திரைவிமர்சனம்

தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…

13 hours ago

விருது வாங்கிய ஜீவி பிரகாஷிற்கு ஏ ஆர் ரகுமானின் அன்பு பரிசு..!

ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…

16 hours ago

மருமகள் சீரியல் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்.. வெளியான புதிய நேரம்.!

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…

19 hours ago

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் இதோ உங்களுக்காக.!!

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

19 hours ago

ரோகினி போட்ட திட்டம், விஜயாவுக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…

21 hours ago