Bharathi Kannamma Serial Episode Update 05.03.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஹேமாவுக்கு பிரியாணி கொடுத்த பிறகு கண்ணம்மாவும் வெண்பாவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்கின்றனர். நீ எதுக்கு அம்மாவுக்கு சாப்பாடு கொண்டு வந்த இதெல்லாம் இன்னையோட நிறுத்திக்க என கண்ணம்மா சொல்கிறார். அத நீ எதுக்கு சொல்றேன் உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் அவ என்ன நீ பெத்த பெண்ணா? நீ அவளுக்கு வெறும் சமையல் அம்மா தானே என கூறுகிறார். உனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என பதிலுக்கு கண்ணம்மா கேட்கிறார்.
நான் சமையல் அம்மா நீ வெறும் ஆண்ட்டி. ஆன்ட்டினா அப்பாவோட கூட பொறந்தவங்கன்னு அர்த்தம். அப்போ நீ பாரதிக்கு தங்கச்சின்னு ஹேமா சரியாதான் சொல்லி இருக்கா என கண்ணம்மா சொல்லி வெறுப்பேத்துகிறார். இதனால் கடுப்பான வெண்பா ஒரு நாள் சமையல் அம்மாவ விட்டுட்டு வெண்பா அம்மான்னு கூப்பிட வைக்கிறேன் என சவால் விட பளார் என கன்னத்தில் ஒரு அறை விடுகிறார். அடுத்த உன் புருஷனுக்கு அலையுற எச்ச என திட்டுகிறார். பெண்பாவை கண்ணம்மா அடையும் நேரத்தில் பாரதி சரியாக வந்து விட எதுக்கு வெண்பாவை அடிச்ச அவள அடிக்கிறதுக்கு உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு. ஹேமாவுக்கு எப்படி யாரோ ஒருத்தியை அதே மாதிரிதான் வெண்பாவும் யாரோ ஒருத்தி. அண்ணாவுக்கு உன்னையும் உன் சாப்பாட்டையும் பிடிக்கும் அதனால தான் அமைதியா இருந்தேன். ஓவரா பண்ணாத என விட்டுவிட்டு என்பதை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார்.
பிறகு வீட்டுக்கு வந்த ஹேமா தன்னுடைய பாட்டியிடம் இன்னைக்கு சமையல் அம்மா சாப்பாட்டை சாப்பிடல, வெண்பா ஆன்ட்டி பிரியாணி கொண்டு வந்தாங்க அதை தான் சாப்பிட்டேன். பிரியாணி நீ எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால சாப்பிட்டேன் என சொல்கிறார். இந்த விஷயத்தைக் கேட்ட சௌந்தர்யா அதிர்ச்சி அடைகிறார். வெண்பா எதுக்கு ஹேமாவுக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுக்கணும் இதுக்கு பின்னாடி ஏதோ திட்டம் இருக்கு என யோசிக்கிறார்.
இந்தப் பக்கம் அப்பாவை கண்டுபிடிக்க போலீஸ் ஆண்ட்டி ரேஷன் கார்டு கேட்டதால் அதை தேட முடிவு செய்து தேடுகிறார் லட்சுமி. ஒரு டைரியில் தேடும் போது அதிலிருந்து பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் கீழே விழுந்துவிடுகிறது. பிறகு கண்ணம்மா உள்ளே வர லட்சுமி எதையோ தேடிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு வெளியே அனுப்புகிறார். பிறகு டைரியை எடுத்து பார்க்கும் போது அதில் இருக்கும் போட்டோவை காணவில்லை என்பதால் கண்ணம்மா பதறுகிறார்.
ஒருவேளை லட்சுமி கண்ணுல போட்டோ மாட்டிடுச்சோ என பயப்பட அந்த நேரத்தில் வந்த வாய்தா வடிவுகரசி அதுக்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை லட்சுமி இந்த போட்டோவை பார்த்து இருந்தால் அமைதியாக இருந்திருக்க மாட்டார் என கூறுகிறார். லட்சுமி அவங்க அப்பாவை தேடுவது போல எனக்கு சந்தேகமா இருக்கு என கண்ணம்மா சொல்ல அதெல்லாம் இருக்காது என வாய்தா வடிவுகரசி கூறிவிடுகிறார்.
இந்த பக்கம் சௌந்தர்யா தன்னுடைய வீட்டில் உள்ளவர்களிடம் ஹேமாவுக்கு வெண்பா எதுக்கு பிரியாணி எடுத்துக்கிட்டு போகணும்? ஹேமா பாரதிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிற விஷயம் வெண்பாவிற்கு தெரியும் போல. ஹேமா மனதில் இடம் பிடித்து அதன் மூலமாக பாரதியை கல்யாணம் பண்ண திட்டம் போடுகிறாளா என சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் ஹேமா ஓடிவந்து வாந்தி எடுக்கிறார்.
பிறகு சௌந்தர்யா இத்தனை நாளா சமையல் அம்மா சாப்பாட்டை சாப்பிட ஏதாவது ஆச்சா ஒரே ஒரு நாள் அந்த வெண்பா கொண்டுவந்த பிரியாணி சாப்பிட்ட, அவளுக்கு சமைக்கவே தெரியாது எந்த ஓட்டல்ல வாங்கிட்டு வந்தாலோ அது நல்லா இருந்துச்சு இல்லையோ அதை சாப்பிட்டு இப்படி வண்டி எடுத்துக்கிட்டு இருக்க இதெல்லாம் உனக்கு தேவையா என கேட்கிறார். சௌந்தர்யா சொன்னதைக் கேட்டு ஹேமாவும் எதையோ யோசிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Hellallallo Video | Peddi (TAMIL) | Ram Charan | Buchi Babu | Shruthi Haasan |…
Tomato Thakkali Promo Video | Parimala and Co | Jayaram | Urvasi |Sandy |Sanjana |…
Roohe Roohe Lyric Video | Habeebi | Shweta Mohan,Kapil Kapilan,Rizwan Shah | Sam CS |…
Ego Raman Official Trailer | Robo Shankar | Ciby chandran | Ganesan Nachimuthu | Reymen…
IYALISAIYE Lyrical Video | Yen Ennai Edho Seidhai | D Anthony | Jaikar Harinath |…
Athiradi Tamil Official Trailer | Tovino Thomas | Basil Joseph | Arun Anirudhan | Vishnu…