Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நீச்சல் குளத்தில் மூழ்கிய லட்சுமி.. பதறியடித்து மூடிய பாரதி, கண்ணம்மா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

Bharathi Kannamma Serial Episode Update 01.04.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி மற்றும் கண்ணம்மா என இருவரும் குழந்தைகளுடன் வெளியே சென்று உள்ள நிலையில் ஜாலியாக என்ஜாய் செய்கின்றனர்.

பிறகு கோஸ்ட் ரூமிற்குள் செல்லலாம் என குழந்தைகள் சொல்ல அனைவரும் உள்ளே செல்ல அங்கே பயந்து நடுங்குகின்றனர். ஒரு கட்டத்தில் பயத்தில் கண்ணம்மா பாரதியை கட்டிப் பிடித்து விட இதே சாக்கா வெச்சு ஒட்டிகலாம்னு பார்க்கறியா என திட்டுகிறார். இன்னொரு இடத்தில் பாரதி கண்ணம்மாவை கட்டிப்பிடித்து விட இப்போ நான் சொல்லட்டுமா டாக்டர் என கூறுகிறார்.

அதன் பின்னர் பாரதி ஹேமாவுக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்த போது அது சட்டையில் கொட்டி விடுகிறது. இங்கேயே இரு நான் வாஷ் பண்ணிட்டு வரேன் என பாரதி ரெஸ்ட் ரூம் செல்கிறார். இந்த நேரத்தில் வெண்பா போன் செய்ய ஹேமா போனை எடுத்து வெறுப்பு ஏற்றுகிறார். சமையல் அம்மா டாடி லட்சுமி என எல்லோரும் வெளியே தீம் பார்க் வந்து இருப்போம் என சொல்ல இதைக் கேட்டு வெண்பா அதிர்ச்சி அடைகிறார். எந்த தீம் பார்க் என கேட்க எதுக்கு நேர்ல கிளம்பி வரவா நீங்க வரவே வராது நாங்க ஜாலியா இருக்கிறோம் டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று சொல்கிறார். இந்த நேரத்தில் பாரதி வர போனை பாரதி இடம் கொடுத்து விடுகிறார். வெண்பா பாரதியிடம் கோபப்பட்டு விட்டு போனை வைத்து விடுகிறார். இந்த பக்கம் இது நினைத்து கடுப்பாக இருக்க அந்த நேரத்தில் சாந்தி நீங்க வேற ஒரு கல்யாணம் பண்ணிட்டு பாரதியை வெறுப்பேத்துங்க என சொல்ல அவரை பளார் என அறை விடுகிறார். இந்த ஜென்மத்துல பாரதியை அடையாமல் விட மாட்டேன் என சவால் விடுகிறார்.

அதன்பிறகு நீச்சல் குளத்தில் ஹேமா லஷ்மி இருவரும் குளிக்க செல்கின்றனர். இடுப்பளவு தண்ணீர் இருக்கும் வரை தான் போக வேண்டும் அதற்கு மேல் பெரியவர்கள் குளிக்கும் இடம் அங்கே செல்லக்கூடாது என சொல்கின்றனர். சரி என இருவரும் பிரண்ட்ஸோட சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் பாரதிக்கு போன் வர அவர் கொஞ்சம் தள்ளி சென்று போன் பேசுகிறார்.

இந்த நேரத்தில் ஜூஸ் கொண்டு வந்து கொடுக்கின்றனர். கண்ணம்மா பாரதி இடம் கொடுத்து விடுமாறு அவருக்கும் சேர்த்து ஜூஸ் கொடுக்க இதைக் கொண்டு சென்று பாரதியிடம் கொடுக்கிறார். இங்க நடக்கறது எல்லாம் திட்டம் போட்டு நடக்குதா? இல்ல எதேச்சையா நடக்குதா என பாரதி கேட்கிறார். சும்மா தேவையில்லாம நீங்களே கற்பனை பண்ணிக்கிட்டு பேசாதீங்க என கண்ணம்மா பாரதியோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

இந்தப் பக்கம் குளித்துக் கொண்டிருக்கும் போது பால் ஆழமான பகுதிக்குச் சென்று விட அதை எடுக்கச் சென்ற லட்சுமி நீருக்குள் மூழ்க ஒரு பையன் ஓடிவந்து லட்சுமி தண்ணீருக்குள் விழுந்து விட்டதாக கூற இருவரும் பதறியடித்து ஓடுகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 01.04.22
Bharathi Kannamma Serial Episode Update 01.04.22